ராகி இட்லி

 

ராகி இட்லி தேவையான பொருட்கள்

ராகி (கேழ்வரகு)                                    - 1 கப்
உளுத்தம் பருப்பு                                  - 3 டீஸ்பூன்
முளைவிட்ட பாசிப்பயறு                - 3 டீஸ்பூன்
முட்டைக்கோஸ்                                - கால் கப்
கொத்தமல்லி                                        - சிறிது
கறிவேப்பிலை                                     - சிறிது
உப்பு                                                           - தேவையான அளவு
சீரகம்                                                         - சிறிது


ராகி இட்லி செய்முறை

உளுத்தம்பருப்பையும், கேழ்வரகையும் தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைத்து இட்லி மாவு போல அரைத்துக் கொள்ளவும்.
சிறிது உப்பு சேர்த்து கலந்து, இரவு வைத்து விட்டு காலையில் எடுத்து முளைவிட்ட பாசிப் பயறு சேர்த்து, முட்டைக்கோஸ், கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து, சீரகத்தூளும் சேர்த்து இட்லிப்பாத்திரத்தில் இட்லியாக ஊற்றி வேக வைத்த எடுக்க ராகி இட்லி தயார்.