பச்சை மிளகாய் மட்டன்



தேவையான பொருட்கள் :

ஆட்டு இறைச்சி - அரை கிலோ

மிளகாய்த் தூள் - அரை மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 12


உருளைக்கிழங்கு - கால் கிலோ


மஞ்சள் துள் - ஒரு தேக்கரண்டி


எண்ணெய் - 50 கிராம்


பூண்டு - 10 பற்கள்


வெங்காயம் - அரை கிலோ


இஞ்சி - ஒரு துண்டு


எலுமிச்சம்பழ சாறு - ஒரு தேக்கரண்டி


உப்பு - தேவையான அளவு


கொத்தமல்லித் தழை - சிறிது



செய்முறை:

1.பூண்டைத் தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாட்டில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

2. உருளைக்கிழங்கைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

3.மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

4.இறைச்சியை நன்கு சுத்தமாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.

5.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

6. வெங்காயம் வதங்கியதும் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

7.வதங்கியதும் வேக வைத்த இறைச்சியைச் சேர்க்கவும்.

8.அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வதக்கவும்.

9.பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து, உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க வைக்கவும்.

10.கலவை கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

மட்டன் ப்ரை



தேவையான பொருட்கள் :

மட்டன் - 350 கிராம்

வெங்காயம் - 2


இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி


மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி


மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி


வரமிளகாய் -3


தயிர் - 100 மில்லி அல்லது தக்காளி -1


சீரகம் - ஒரு தேக்கரண்டி


சோம்பு - ஒரு தேக்கரண்டி


உப்பு - தேவையான அளவு


பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2



செய்முறை :

1.குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்கள் மற்றும் சோம்பு,வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

2. அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

3.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

4.அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

5.மட்டன் வதங்கியதும் தயிர் மற்றும் சீரகம் சேர்த்து பிரட்டி விடவும்.

6.மட்டன் வேக அதில் இருக்கும் தண்ணீரே போதுமானது, தேவையெனில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சிம்மில் வைத்து வேக விடவும்.

7.மட்டன் வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்

முட்டை மசாலா ஆப்பம்


தேவையான பொருட்கள் :

முட்டை - 2

பச்சரிசி - கால் கிலோ

புழுங்கல் அரிசி - கால் கிலோ


உளுத்தம் பருப்பு - 4 தேக்கரண்டி


கல் உப்பு - 2 தேக்கரண்டி


சோடா உப்பு - 4 சிட்டிகை


பச்சைமிளகாய் - 4


சின்ன வெங்காயம் - 4


பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி


மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி


வெந்தயம் - கால் தேக்கரண்டி


தேங்காய் துருவல் - ஒரு கப்



செய்முறை :

1.பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு மூன்றையும் ஒன்றாகப் சேர்த்து 4 மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவும்.

2.அத்துடன் வெந்தயம் போட்டு எல்லாவற்றையும் கழுவி ஆட்டுக்கல் அல்லது கிரைண்டரில் தோசை மாவு போல அரைக்கவும்.

3.அரைக்கும் போது தேங்காய் துருவல் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.

4.அரைத்த மாவை மறுநாள் எடுத்து அத்துடன் சமையல் சோடா, மஞ்சள் தூள் போட்டு கலந்து வைக்கவும்.

5.இரண்டு முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக அடித்துக் கலக்கி மாவில் ஊற்றவும்.

6.பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், பெருஞ்சீரகம் இவற்றை அம்மியில் விழுதாக அரைத்து மாவில் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து மாவை நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.

7.வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் தடவி விட்டு இரண்டு கரண்டி மாவை எடுத்து வட்டமாக ஊற்றி ஒரு மூடியால் மூடி விடவும்.

8.அடுப்பை நிதானமாக எரிய விட வேண்டும். ஒரு பக்கம் வெந்தால் போதுமானது. வெந்தவுடன் எடுத்து கோழிக்குழம்புடன் பரிமாறவும்.

க்ரிஸ்பி சிக்கன் - KFC Chikken


தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ

மைதா மாவு - ஒரு கப்

முட்டை - 1 (அ) 2


மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி


மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி


சீரகத் தூள் - கால் தேக்கரண்டி


மல்லித் தூள் - அரை தேக்கரண்டி


மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி


உப்பு - தேவையான அளவு


எண்ணெய் - பொரிப்பதற்கு



செய்முறை:

1.தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். சிக்கனை எலும்பில்லாமல் மெல்லிய நீளமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

2.பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் கலந்து அடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன் தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

3.பிறகு சிக்கன் துண்டுகளை முட்டையில் தோய்த்தெடுத்து, கலந்து வைத்துள்ள மைதா மாவில் நன்கு பிரட்டவும்.

4.வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, மைதா மாவில் பிரட்டிய சிக்கன் துண்டுகளைப் போட்டுப் பொரிக்கவும்.

5.நன்கு பொரிந்து கிரிஸ்பியாக வந்தவுடன் எண்ணெயை வடியவிட்டு எடுக்கவும்.