முந்திரி மட்டன் சுக்கா வறுவல்


தேவையான பொருள்கள்

மட்டன் -1 கிலோ
இஞ்சி-1 துண்டு
பூண்டு -1
வெங்காயம் -இரண்டு
மிளகாய்த்தூள்-4ஸ்பூன்
மஞ்சள் தூள்-1ஸ்பூன்
பட்டை-சிறிய துண்டு
கிராம்பு தேவையான அளவு
தேங்காய்-சிறிய துண்டு
முந்திரி பருப்பு-சிறிது
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு

செய்முறை
மட்டனை நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும். வெங்காயத்தை தாளிப்பதற்கு நறுக்கி கொள்ளவும். தேங்காயுடன் முந்திரி பருப்பையும் சேர்த்து அரைத்து வத்க்கி கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு வாசனை பொருட்களை எண்ணெயில் போட்டு வதக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும். பின்னர் மசாலாதூள் போட்டு வதக்கி ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். மட்டன் வெந்ததும் வதக்கி வைத்துள்ள மசாலாவை போட்டு கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கவும்

வெந்தயக் கறி


தேவை:

மட்டன் - கால் கிலோ.
வெந்தயம் - 4 ஸ்பூன்.
பட்டை, கிராம்பு - 2 ஸ்பூன்.
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்.
காய்ந்த மிளகாய் - 20.
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

குக்கரில் எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம், பட்டை, கிராம்பு, காய்ந்த மிளகாய்
போட்டு வதக்கவும். இதில் மட்டனையும் நன்கு வதக்கி, ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.. வெந்ததும் மஞ்சள் தூள் தூவி மட்டனை நன்கு கிளறி, கீழே இறக்கவும்.

மட்டன் கோலா

தேவையான பொருள்கள்:

கொத்துகறி  - கால் கிலோ

சின்ன வெங்காயம் - 25

தேங்காய் துருவல் - அரை கப்

பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி

பொட்டுகடலை - அரை கப்

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - 3/4 தேக்கரண்டி


 செய்முறை:


கறியை கழுவி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கறியை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு  மிக்ஸியில் போட்டும் அரைத்து எடுக்கவும்.
கறி நன்கு விழுது போல் இருக்க வேண்டும்.

அப்போதுதான் கோலா நன்றாக வரும்.
மிக்ஸியில் பொட்டுகடலையை மட்டும் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 தேங்காய், பெருங்சீரகம் இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்


பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள கறி மற்றும் நறுக்கின வெங்காயம் சேர்க்கவும். 

அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து, கைகளால் நன்கு பிசையவும். தண்ணீர் சேர்க்காமல் பிசையவும். மசாலா வடை மாவினை விட சற்று கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாக இல்லையெனில் சிறிது பொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிசைந்து கொள்ளலாம்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை, ஒரு தடவைக்கு ஐந்து ஆறாக, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

செட்டிநாடு மட்டன் கிரேவி

தேவையான பொருள்கள்
மட்டன் -1/4 கிலோ
சின்ன வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 20
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
தக்காளி (பொடியாக நறுக்கியது) – 2
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் ½ ஸ்பூன்
மிளகு சீரகத் தூள் – 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைத்துக் கொள்ள:
தேங்காய் – 1 ஸ்பூன்
சகசா - 1ஸ்பூன்
முந்திரி - 4
தாளிக்க:
பட்டை - சிறிய துண்டு
ஏலக்காய் - 1
லவங்கம் – 1
சோம்பு – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை – 1 கொத்து
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்


செய்முறை:

முதலில் மட்டனை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு மஞ்சள் தூள், உப்பு மற்றும் ½ கப் தண்ணீர் விட்டு 3 விசில் வரை விட்டு, பின் சிம்மில் 5 நிமிடம் வேக விடவும். அடி கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடவும்

பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின், தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். பிறகு, மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்

பின் வேக வைத்த மட்டனைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்து வதக்கி, மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக விடவும்

தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கி, பின் மிளகு சீரகத் தூள் சேர்த்து, மசாலா நன்றாகக் கெட்டியாகி வறுவல் பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

இந்த வறுவல் அனைத்து சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

மட்டன் சுக்கா

















தேவையான பொருள்கள்


எலும்பு நீக்கிய  மட்டன் -  கால் கிலோ

மஞ்சள்தூள்                         - அரை ஸ்பூன்

மிளகாய் தூள்                      - 2  ஸ்பூன்

இஞ்சி,  பூண்டுபேஸ்ட்     - 2  ஸ்பூன்

சின்ன வெங்காயம்           - 15

தேங்காய் துருவியது       - 3  ஸ்பூன்

முந்திரி பருப்பு                   -   10

கடுகு                                       - 1 ஸ்பூன்

சமையல் எண்ணெய்      -  ஸ்பூன்

மிளகு தூள்                           -   2 ஸ்பூன்

உப்பு                                         -  தேவையான அளவு




செய்முறை

1. தேங்காய், முந்திரி பருப்பு இரண்டையும் தண்ணீர் சேர்க்காமல்  சற்று கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

2. மட்டனை கழுவி அதோடு சிறிதளவு   உப்பு ,மஞ்சள்தூள், 1 ஸ்பூன் இஞ்சி,  பூண்டுபேஸ்ட்   சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு போட்டு தாளிக்கவும்.

4. கடுகு வெடித்தவுடன் அதோடு சாம்பார் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன்  இஞ்சி,  பூண்டுபேஸ்ட் போட்டு வதக்கி அதனுடன்    மஞ்சள்தூள் ,மிளகாய் தூள்     சேர்த்து  நன்கு கிளரவும்.

5.  மசாலா எல்லாம் நன்கு வதங்கிய பின் வேக வைத்த  மட்டன்  அதனுடன்    சிறிது  உப்பு சேர்த்து வதக்கி கடாயை மூடி  10 நிமிடம்  அடுப்பை  சிம்மில் வைக்கவும்.

6.  அதோடு அரைத்த தேங்காய் விழுது   1  ஸ்பூன்  மிளகு  தூள்  சேர்த்து வதக்கி தண்ணீர்  நன்கு  வற்றியவுடன்  கிளரி இறக்கவும்.  சுவையான மட்டன் சுக்கா ரெடி.

 உணவு - தமிழ் விக்கிப்பீடியாஆரோக்கியமான உணவு - Old Age Solutionsசமையற்கலை , கேரளா உணவு ... - Kerala Tourism
உணவு | Facebookஇயற்கை உணவும் இனிய வாழ்வும் ...இயற்கை உணவு - Dinakaranஉணவு உண்ணும் முறைஇயற்கை உணவு உலகம் | Natural Food World ...இந்திய உணவு கழகத்தில் பல்வேறு பணி ...குழந்தைக்கு என்ன உணவு ... - Arusuvaiகுழந்தைகளின் உணவு முறையில் ...ஆரோக்கிய உணவு | Healthy Food | Healthy Foods ...17 உணவு பூங்கா அமைக்க மத்திய அரசு ...ஹைன்ஸ்- கிராஃப்ட்: இரண்டு பெரிய ... - BBCஉணவு - 4TamilMediaஉணவுஉலகம்உணவு நலம்எப்போதும் இளமையாக இருக்க 21 உணவு ...உணவு சார்ந்த விஞ்ஞான பிரிவுசரிவிகித உணவு - தமிழ் விக்சனரிநமக்கு ஏற்ற உணவு எது? | Isha Tamil Blogகேள்விக்குறியாகும் உணவு ... - Dinamalarபர்டன் சீவர்: பேணக்கூடிய கடல் உணவு ...மத்திய உணவு பதப்படுத்தும் ...ராகுல்காந்தியின் அமேதி ... - மாலைமலர்முகில் / MUGIL » Blog Archive » உணவு சரித்திரம்கூட்டுறவு,உணவு (ம) - Tamil Nadu Government Portalகாலை உணவு News - காலை உணவு Latest news ...உணவு பதப்படுத்தும் ...உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - Food ...Natural food, Organic food | ஆர்கானிக் உணவு ...அசைவ உணவு உண்பவர்களுக்கு ...Adupillaamal Arusuvai Unavu - நூல் உலகம்அசைவ உணவு உண்பவர்களுக்கு ...சரகர் கூறும் உணவு முறைகள்உணவு ஆணையாளர் திணைக்களம்உணவை பாதுகாக்க கைகோர்ப்போம் ...வகைவகையான சைவ உணவு ... - YouTube
பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவு ...5 ரூபாய்க்கு சாப்பாடு - Puthiyathalaimuraiஉணவை ஜீரணம் செய்வது எப்படி?உலக சுகாதார தினத்தையொட்டி உணவு ...உணவு - எப்படி சாப்பிடுவது?, எவ்வளவு ...உணவு ஒவ்வாமையினால் 80 பேர் ...
கட்டுரை: தேசிய உணவுப் ...சைவ உணவு வகைகள். - நாவூற வாயூற ...இன்று உலக சுகாதார தினம், உணவு ...சைவ உணவே மனிதகுல சன்மார்க்க உணவு ...ஒடிஸாவில் புதிய திட்டம்: ரூ.5 க்கு ...முடிவு PolioThe உலகின் சிறந்த உணவு ...




மட்டன் சுக்கா [எளிய முறை]

தேவை:
மட்டன்         - அரை கிலோ.
மிளகு, சீரகம்    - 2 ஸ்பூன்.
காய்ந்த மிளகாய் - 10.                   
கரம்மசாலா     - 1 ஸ்பூன்.
இஞ்சி, பூண்டு விழுது  - 2 ஸ்பூன்.
உப்பு, எண்ணெய்     - தேவைக்கு.






செய்முறை:

தேவையான பொருட்களில் இருக்கும் எல்லா மசாலா பொருட்களையும் ஒன்றாக அரைக்கவும்.


அரைத்த விழுதில் மட்டன் துண்டுகளுடன், உப்பையும் கலந்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.

விசில் வந்ததும் அடுப்பை  'சிம்மில்' வைத்து ' மட்டன்' 'சுக்கா' வாக ஆகும் வரை மட்டன் துண்டுகளை திருப்பி திருப்பிப் போடவும்.

சீரக சம்பா மட்டன் பிரியாணி

தேவையான பொருள்கள்.
சீரக சம்பா அரிசி - 4 கப்
மட்டன் - அரை கிலோ
இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 25 பல்
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் 1  ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை   ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது -   2 ஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி
தயிர் - அரை கப்
லெமன் -1
புதினா - ஒரு கட்டு
மல்லித் தழை - ஒரு கட்டு
நெய் - அரை கப்
எண்ணெய் - அரை கப்
உப்பு      - தேவையான அளவு
தாளிக்க:
கிராம்பு - 3
பட்டை - 3 சிறிய துண்டு
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - ஒரு   ஸ்பூன்

 செய்முறை


 மட்டனில் கால்கப்தயிர், மஞ்சள்தூள்,, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் ஒரு  ஸ்பூன் உப்பு  போட்டு 5விசில்வரும் வரை வேக வைக்கவும்.                 


பெரியவெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைகீறி வைக்கவும்.பூண்டைதனியாக அரைத்துக் கொள்ளவும்.                 


குக்கரை அடுப்பில் வைத்து நெய்,  எண்ணெய் இரண்டையும்சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, நறுக்கியவெங்காயம், பச்சைமிளகாய்சேர்த்துவதக்கவும்.       
வெங்காயம்  பொன்னிறமானதும் பூண்டுவிழுதைப்போட்டுவதக்கவும்.   வெங்காயம் 
2 நிமிடங்கள்வதங்கியதும் மிளகாய்தூள் போட்டுவதக்கவும்.                 
5நிமிடங்கள்வதக்கிஎண்ணெய்பிரிந்ததும்நறுக்கியதக்காளியைச்சேர்க்கவும்.தக்காளிநன்றாகவதங்கிகூழானதும்தயிர்சேர்க்கவும்.                  
தேங்காயுடன் இஞ்சி, சேர்த்து மிக்ஸியில்அரைத்து தண்ணீர்ஊற்றி 4 கப் பால்எடுத்து வைக்கவும்.

தேங்காய்பால், மட்டன்வேக வைத்த தண்ணீர்இரண்டும்சேர்த்து 8  கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, மல்லித்தழைசேர்க்கவும்.          
ஒருகொதிவந்ததும்அரிசியைபோட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளரி குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து குக்கரை இறக்கவும்.
பின்பு 10 நிம்டம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளரி விட்டு பரிமாறவும்  .சுவையான சீரக சம்பா  மட்டன்பிரியாணிதயார்.

எலும்பு சூப்

தேவையான பொருட்கள்

ஆட்டு எலும்புகறி      -    1/2 கிலோ

தக்காளி              -     2

சாம்பார் வெங்காயம்  -- 10

பச்சை மிளகாய்       -    2

வெண்ணெய்             -  சிறிதளவு

அரைக்க:-

இஞ்சி               –     1 சிறுதுண்டு

பூண்டு              -     10 பல்

மிளகு தூள்       -     2 டீஸ்பூன்

சீரகதூள்            -     2 டீஸ்பூன்


கொத்தமல்லி இலை -     1/2 கட்டு

எலுமிச்சம் சாறு            -     1/2 ஸ்பூன்

உப்பு                      -     தேவைக்கேற்ப

செய்முறை :

தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில்  சிறிது வெண்ணெய்  ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

அது பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, எலும்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மிளகு தூள், சீரகதூள்,  கொத்தமல்லி இலை சேர்த்து   4 கப்  தண்ணீரைச் சேர்த்து 6 விசில் வரும் வரை வேக வைக்கவும்..

தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். . பின் அரைத்த தக்காளி விழுதை  சேர்த்து  கொதிக்க வைத்து இறக்கி பறிமாறவும்  .

தேவையானால் லெமன் சாறு சேர்த்து கொள்ளவும்...
இந்ந சூப் செய்வது மிகவும் எளிது செய்து பாருங்கள்  குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மட்டன் கடாய்

தேவையான பொருட்கள்:

மட்டன்(எலும்பில்லாதது) - அரைக் கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 3 ஸ்பூன்
பட்டை - ஒரு அங்குல அளவு
ஏலக்காய் - 2
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 9 ஸ்பூன்
)மல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

மட்டனை சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் பச்சை மிளகாயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


குக்கரில் சுத்தம் செய்த மட்டனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், பொடியாக நறுக்கின   வெங்காயம் ,  பச்சை மிளகாய் ,தக்காளி  , சிறிது  கொத்தமல்லி  இலை  மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கறி வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.


குக்கரை மூடி அடுப்பில் வைத்து வெயிட் போட்டு 4   விசில் வந்ததும் அடுப்பை வைத்து 10 நிமிடம் வைத்திருந்து  பின்னர் இறக்கவும்
குக்கரின் மூடியை திறந்து அதில் தண்ணீர் அதிகமிருந்தால்  அடுப்பில் வைத்து தண்ணீரை சுண்ட விடவும்.

கடாயை அடுப்பில் வைத்து   எண்ணைய்  ஊற்றி  பட்டை மற்றும் ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.  அதில் இந்த மட்டன் கலவையை ஊற்றிஅடிக்கடி  கிளறி விடவும். இல்லையென்றால் அடி பிடித்து விடும்

மட்டன் கலவை நன்கு சுருண்டு வந்ததும் தீயை மிதமாக வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். 15 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.


சுவையான மட்டன் கடாய் வறுவல் ரெடி. எவ்வளவு அதிக நேரம் அடுப்பில் வைத்திருக்கின்றோமோ அவ்வளவு மொறுமொறுப்பாக இருக்கும்..இப்போது சுவையான மட்டன் கடாய் ரெடி

மட்டன் சாப்ஸ்

தேவையான பொருள்கள்

மட்டன் -  அரை  கிலோ
கலந்த  மிளகாய்ப்தூள்  - 2  ஸ்பூன்
மஞ்சள்பொடி - ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் -   2  ஸ்பூன்
சோம்புத்தூள் -1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தேங்காய்ப்பால் - ஒரு கப்
எண்ணெய் -   4 ஸ்பூன்
  கரம்மசாலாபொடி - 1 ஸ்பூன்

செய்முறை

மட்டனை கழுவி தண்ணீரை வடிய விட்டு எண்ணெய் தவிர எல்லாவற்றையும் போட்டு கிளரி   ஒரு  மணி நேரம் ஊறவைக்கவும்.


குக்கரில் எண்ணெய் விட்டு கிளரிய  மட்டனை கொட்டி கிளறிக்கொண்டே இருக்கவும்.

மட்டனில் உள்ள தண்ணீர் முழுவதும் வற்றி மட்டன் நிறம் மாறி வரும்போது   அரை டம்ளர் தண்ணீர் தெளித்து கிளறி குக்கரை   மூடி  6  விசில் வைத்து சிறுதீயில் 10 நிமிடம் வைத்து இறக்கவும்.


பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து அடுப்பில் வைத்து கிளறிகொண்டே இருக்கவும்.

மசாலா குக்கரில் ஒட்டாமல் மட்டன் தனித்தனியாக மசாலா ஒட்டி வரும்போது இறக்கவும்.

இந்த சாப்ஸ் மிகவும் சுவையானது. .