எலும்பு சூப்

தேவையான பொருட்கள்

ஆட்டு எலும்புகறி      -    1/2 கிலோ

தக்காளி              -     2

சாம்பார் வெங்காயம்  -- 10

பச்சை மிளகாய்       -    2

வெண்ணெய்             -  சிறிதளவு

அரைக்க:-

இஞ்சி               –     1 சிறுதுண்டு

பூண்டு              -     10 பல்

மிளகு தூள்       -     2 டீஸ்பூன்

சீரகதூள்            -     2 டீஸ்பூன்


கொத்தமல்லி இலை -     1/2 கட்டு

எலுமிச்சம் சாறு            -     1/2 ஸ்பூன்

உப்பு                      -     தேவைக்கேற்ப

செய்முறை :

தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில்  சிறிது வெண்ணெய்  ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

அது பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, எலும்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மிளகு தூள், சீரகதூள்,  கொத்தமல்லி இலை சேர்த்து   4 கப்  தண்ணீரைச் சேர்த்து 6 விசில் வரும் வரை வேக வைக்கவும்..

தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். . பின் அரைத்த தக்காளி விழுதை  சேர்த்து  கொதிக்க வைத்து இறக்கி பறிமாறவும்  .

தேவையானால் லெமன் சாறு சேர்த்து கொள்ளவும்...
இந்ந சூப் செய்வது மிகவும் எளிது செய்து பாருங்கள்  குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.