காரைக்குடி மீன் குழம்பு / karaikudi meen kulambu

 meen kulambu க்கான பட முடிவு

தேவைாயன பொருள்கள்

மீன்-   அரை கிலோ
தேங்காய்  - அரை மூடி
மிளகு-  1  ஸ்பூன்
சீரகம்-1ஸ்பூன்
புளி-எலுமிச்சை பழ அளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள்-2  ஸ்பூன்
தனியாத்தூள்- 3  ஸ்பூன்
மஞ்சள் தூள்-  கால் ஸ்பூன்
நறுக்கிய  வெங்காயம்  - 2
தக்காளி நறுக்கியது  - 3
பூண்டு  -  10 பல்
மல்லி  இலை -  சிறிதளவு
நல்லெண்ணெய்-1குழிக்கரண்டி அளவு
கடுகு-  1 ஸ்பூன்
வெந்தயம்-  1  ஸ்பூன்
பச்சை மிளகாய்-4
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை-தேவையான அளவு


செய்முறை

மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

புளியை  தண்ணீரில் கரைத்து  வைத்து கொள்ளவும்.

தேங்காய், மிளகு, சீரகம், சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக   அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய்   ஊற்றி  சிறிதளவு  சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின் பூண்டு, வெங்காயம்,  இஞ்சி பூண்டு விழுது,    சேர்த்து  2  நிமிடங்கள் வதக்கவும்.

அதனுடன்  பச்சை மிளகாய்  , தக்காளி சேர்த்து நன்கு  வதக்கவும். பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள  தேங்காய்  விழுது   தேவைாயான அளவு தண்ணீர்    சேர்த்து   நன்கு கொதிக்க விடவும். 

குழம்பு  ஒரளவு கெட்டியானவுடன் மீன்  சேர்த்து 10 நிமிடம்  கொதிக்க விட்டு   மல்லி இலை கறிவேப்பிலை  போட்டு  இறக்கவும்

சுவையான காரைக்குடி மீன்குழம்பு ரெடி

செட்டிநாடு மிளகு நண்டுக் குழம்பு / chettinad milagu nandu kulambu


nandu kulambu க்கான பட முடிவு


தேவையான பொருட்கள்:

நண்டு - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 4
காய்ந்த   மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
புளி - சிறிதளவு
இஞ்சி - சிறிது
மிளகாய்த்தூள்- 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்

மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

சீரகம் - 1ஸ்பூன்

மிளகு - 3  ஸ்பூன்
தேங்காய் - 1 மூடி
நல்லெண்ணெய் - குழிகரண்டி அளவு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க

பட்டை - சிறிதளவு
கிராம்பு - சிறிதளவு
சோம்பு  - சிறிதளவு

செய்முறை:

நண்டைச் சுத்தம் செய்து சுடுநீரில்  மஞ்சள் தூள் போட்டு  பிரட்டி வைக்கவும். தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றுடன் சின்ன  வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.


கடாயில்  எண்ணெய்  விட்டு    தாளிக்க வேண்டிய பொருட்கள் சேர்த்துத் தாளித்து அதில்நறுக்கிய  வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும்.

அதில் சுத்தம் செய்து வைத்த நண்டை எடுத்துச் சேர்த்துக் கிளறவும். பின்பு சிறிதளவு புளிக்கரைசலை ஊற்றவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்துக் கிளறி விடவும்.

இதில் அரைத்து தேங்காய் விழுது   சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். நண்டு நன்றாக வெந்தவுடன் இறக்கவும்.

ஆந்திர மீன் வறுவல் / andhra meen varuval

andhra fish fry க்கான பட முடிவு


தேவையான பொருள்கள்

வஞ்சிரம் மீன் -  அரை கிலோ
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1  ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
எலுமிச்சை சாறு  -   2 ஸ்பூன்
எண்ணெய்பொரிக்க   - தேவையான அளவு


செய்முறை


மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்பு   மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு  அனைத்தும் சேர்த்து நன்கு கலந்து மசாலா ரெடி பண்ணி கொள்ளவும்.

இப்போது மீன் துண்டுகளை எடுத்து மசாலாவில்  நன்கு தடவி  அரை  மணி  நேரம்   அதை ஊற வைக்கவும். 

பின்கடாயில்   எண்ணெய்   ஊற்றி   காய்ந்ததும்   மீன் துண்டுகளை போட்டு இருபக்கமும் திருப்பி  போட்டு  வறுத்து எடுக்கவும்.   சுவையான    காலமான  ஆந்திர மீன் வறுவல்   ரெடி.

Fish Fry in andhra Style...

சாக்லெட் குல்பி



கோடைக்காலத்தில் குளிர்ச்சியாக ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதில் பெரும்பாலானோர் சாப்பிட விரும்புவது ஜூஸ் அல்லது ஐஸ் தான். இதில் ஜூஸை அனைவருக்கும் செய்ய தெரியும். ஆனால் ஐஸ் வகைகளில் ஒன்றான குல்பியை செய்யத் தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, குல்பியில் ஒன்றான சாக்லெட் குல்பியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.


தேவையான பொருட்கள்:

பால் - 2 கப்

பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

சாக்லெட் - 1 கப் (துருவியது)

சர்க்கரை - 1/2 கப்

பிஸ்தா - சிறிது (நறுக்கியது)


செய்முறை:

முதலில் ஒரு பௌலில் பாலை ஊற்றி, அதில் பால் பவுடர் சேர்த்து கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

அப்படி கொதிக்கும் போது அவ்வப்போது கிளறி விட வேண்டும். பாலானது சுண்டி சற்று கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

சர்க்கரையானது கரைந்ததும், அதனை இறக்கி, அதில் பிஸ்தா மற்றும் சாக்லெட்டை போட்டு, நன்கு கிளறி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.
சாக்லெட் கரைந்ததும், அதனை ஒரு பேனில் ஊற்றி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும்.

1 மணிநேரம் ஆன பின்னர், அதனை வெளியே எடுத்து மிக்ஸரில் போட்டு ஒருமுறை நன்கு அடித்து, பின் அதனை குல்பி மோல்ட்டில் ஊற்றி, அதன் நடுவே குச்சியை வைத்து, ப்ரீசரில் 5-6 மணிநேரம் வைத்து எடுத்தால், சாக்லெட் குல்பி ரெடி!!!

பச்சை மிளகாய் மட்டன்



தேவையான பொருட்கள் :

ஆட்டு இறைச்சி - அரை கிலோ

மிளகாய்த் தூள் - அரை மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 12


உருளைக்கிழங்கு - கால் கிலோ


மஞ்சள் துள் - ஒரு தேக்கரண்டி


எண்ணெய் - 50 கிராம்


பூண்டு - 10 பற்கள்


வெங்காயம் - அரை கிலோ


இஞ்சி - ஒரு துண்டு


எலுமிச்சம்பழ சாறு - ஒரு தேக்கரண்டி


உப்பு - தேவையான அளவு


கொத்தமல்லித் தழை - சிறிது



செய்முறை:

1.பூண்டைத் தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாட்டில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

2. உருளைக்கிழங்கைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

3.மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

4.இறைச்சியை நன்கு சுத்தமாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.

5.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

6. வெங்காயம் வதங்கியதும் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

7.வதங்கியதும் வேக வைத்த இறைச்சியைச் சேர்க்கவும்.

8.அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வதக்கவும்.

9.பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து, உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க வைக்கவும்.

10.கலவை கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

மட்டன் ப்ரை



தேவையான பொருட்கள் :

மட்டன் - 350 கிராம்

வெங்காயம் - 2


இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி


மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி


மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி


வரமிளகாய் -3


தயிர் - 100 மில்லி அல்லது தக்காளி -1


சீரகம் - ஒரு தேக்கரண்டி


சோம்பு - ஒரு தேக்கரண்டி


உப்பு - தேவையான அளவு


பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2



செய்முறை :

1.குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்கள் மற்றும் சோம்பு,வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

2. அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

3.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

4.அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

5.மட்டன் வதங்கியதும் தயிர் மற்றும் சீரகம் சேர்த்து பிரட்டி விடவும்.

6.மட்டன் வேக அதில் இருக்கும் தண்ணீரே போதுமானது, தேவையெனில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சிம்மில் வைத்து வேக விடவும்.

7.மட்டன் வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்

முட்டை மசாலா ஆப்பம்


தேவையான பொருட்கள் :

முட்டை - 2

பச்சரிசி - கால் கிலோ

புழுங்கல் அரிசி - கால் கிலோ


உளுத்தம் பருப்பு - 4 தேக்கரண்டி


கல் உப்பு - 2 தேக்கரண்டி


சோடா உப்பு - 4 சிட்டிகை


பச்சைமிளகாய் - 4


சின்ன வெங்காயம் - 4


பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி


மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி


வெந்தயம் - கால் தேக்கரண்டி


தேங்காய் துருவல் - ஒரு கப்



செய்முறை :

1.பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு மூன்றையும் ஒன்றாகப் சேர்த்து 4 மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவும்.

2.அத்துடன் வெந்தயம் போட்டு எல்லாவற்றையும் கழுவி ஆட்டுக்கல் அல்லது கிரைண்டரில் தோசை மாவு போல அரைக்கவும்.

3.அரைக்கும் போது தேங்காய் துருவல் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.

4.அரைத்த மாவை மறுநாள் எடுத்து அத்துடன் சமையல் சோடா, மஞ்சள் தூள் போட்டு கலந்து வைக்கவும்.

5.இரண்டு முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக அடித்துக் கலக்கி மாவில் ஊற்றவும்.

6.பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், பெருஞ்சீரகம் இவற்றை அம்மியில் விழுதாக அரைத்து மாவில் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து மாவை நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.

7.வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் தடவி விட்டு இரண்டு கரண்டி மாவை எடுத்து வட்டமாக ஊற்றி ஒரு மூடியால் மூடி விடவும்.

8.அடுப்பை நிதானமாக எரிய விட வேண்டும். ஒரு பக்கம் வெந்தால் போதுமானது. வெந்தவுடன் எடுத்து கோழிக்குழம்புடன் பரிமாறவும்.

க்ரிஸ்பி சிக்கன் - KFC Chikken


தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ

மைதா மாவு - ஒரு கப்

முட்டை - 1 (அ) 2


மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி


மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி


சீரகத் தூள் - கால் தேக்கரண்டி


மல்லித் தூள் - அரை தேக்கரண்டி


மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி


உப்பு - தேவையான அளவு


எண்ணெய் - பொரிப்பதற்கு



செய்முறை:

1.தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். சிக்கனை எலும்பில்லாமல் மெல்லிய நீளமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

2.பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் கலந்து அடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன் தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

3.பிறகு சிக்கன் துண்டுகளை முட்டையில் தோய்த்தெடுத்து, கலந்து வைத்துள்ள மைதா மாவில் நன்கு பிரட்டவும்.

4.வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, மைதா மாவில் பிரட்டிய சிக்கன் துண்டுகளைப் போட்டுப் பொரிக்கவும்.

5.நன்கு பொரிந்து கிரிஸ்பியாக வந்தவுடன் எண்ணெயை வடியவிட்டு எடுக்கவும்.