செட்டிநாடு மட்டன் குழம்பு - Chettinad Mutton Kulambu

செட்டிநாடு மட்டன் குழம்பு - Chettinad Mutton Kulambu
தேவையான பொருட்கள் :


  • மட்டன் (இளம் ஆட்டுகறி) 1/2 கிலோ
  • சீரகம் - 1 டீஸ் ஸ்பீன்
  • மிளகு - 1 டீஸ் ஸ்பீன்
  • சோம்பு -1 டீஸ் ஸ்பீன்
  • பட்டை - இரண்டு விரல் அளவு
  • லவங்கம் - 1 டீஸ் ஸ்பீன்
  • நட்சத்திர பூ - மூன்று துண்டு
  • காய்ந்த மிளகாய் - 6
  • இஞ்சி - பாதி உள்ளங்கை அளவு
  • பூண்டு - பெரிய பூண்டு 2
  • பச்சை மிளகாய் - 4 கீறியது
  • கருவேப்பிள ை - தேவையான அளவு
  • கொத்தமல்லி - தேவையான அளவு
  • தக்காளி - 2 பெரியது, சின்னதாக இருந்தால் 3
  • சின்ன வெங்காயம் - 1/2 கிலோ

செய்முறை

  • இளங்கறியாக இருந்தால் அதை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கொஞ்சம் முத்தின கறியாக இருந்தால் தனியாக குக்கரில் போட்டு கொஞ்ச நேரம் வேக வைக்கவும்.

  • (இளங்கறியை எப்படி கண்டுபிடிபபது. இளங்கறி என்பது பார்ப்பதற்கு ரோஸாக இருக்கும், முத்தின கறி என்பது சிகப்பாக இருக்கும். அதே போல ஆட்டு உடலில் மிகவும் ருசினான பகுதி என்பது ஆட்டின் முன் இரண்டு கால்களில் இருக்கும் சதை தான்)

  • இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், மிளகு, நட்சத்திர பூ, காய்ந்த மிளகாய் அனைத்தையும போட்டு வாணலில் நன்றாக வதக்கவும், அது பொன் நிறத்தில் மாறியவுடன் . அதை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

  • பின்பு சின்ன வெங்காயத்தயும், தக்காளியைம் நன்றாக வதக்கி விட்டு அதையும் அரைத்துக் கொள்ளவும்.

  • அடுப்பில் மண் சட்டு இருந்தால் அதை வைக்கவும், அப்படி இல்லை என்றால் சாதாரண அடிப்பிடிக காத பாத்திரத்த வைக்கவும்,

  • எண்ணையை கொஞ்சமாக ஊற்றிக் கொள்ளவும், காரணம் ஏற்கனவே வதக்கிய பொருட்களில எண்ணை இருப்பதால் , எண்ணையை கொஞ்சமாக விட்டு விடவும்.

  • முதலில் கருவேப்பில போடவும், அப்புறம் பச்சை மிளகாய் அப்புறம் அரைத்து வைத்து இருக்கும் மசாலாவை போடவும். கொஞ்ச நேரம் கழித்து தக்காளி வெங்காயம் அரைத்ததை போடவும். நன்றாக கிளறி விடவும். அதன் பின் கறியை போடவும்.

  • கலருக்காக கொஞ்சம் மிளகாய் பொடியை தூவிக் கொள்ளலாம், மசாலா நன்றாக கறியில் ஏறும் வரை கறியை அடிபிடிக்கமல் கரண்டியால் புரட்டவும்

  • அளவான தண்ணீரை ஊற்றி விட்டு அடுப்பில் தாழ்வான நெருப்பை வைத்து விட்டு அரை மணி நேரம் வேக வைக்கவும், கறி பஞ்சு பஞ்சாக ஆகும் வரை.

  • அதன் பின் தேங்காயை தேவையான அளவு 3 பத்தை எடுத்துக் கொண்டு அதை அரைத்து குழம்பில் போட்டு, கொத்தமல்லி யையும் கலந்து 10 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.

  • அருமையான காரமான சுவையான செட்டிநாட் டு மட்டன் குழம்பு ரெடி

செட்டிநாடு மட்டன் குழம்பு - Chettinad Mutton Kulambu