பராத்தா சாண்ட்விச்

 
பராத்தா சாண்ட்விச் தேவையான பொருட்கள்

பனீர்                                                            – 200 கிராம்
குடமிளகாய்                                         – 1
வெங்காயம்                                          – 1
வெண்ணெய் (அல்லது) நெய்  – தேவையான அளவு
சாட் மசாலா                                          – 1 டீஸ்பூன்
எண்ணெய்                                             – தேவையான அளவு

மேரினேட் செய்ய

தயிர்                                         – 1 கப்
கொத்தமல்லி இலை   – 2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி                         – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா                       – 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா                       – 1/2 டீஸ்பூன்
காலா நமக்                          – 1/4 டீஸ்பூன்
மிளகாய்பொடி                 – 1 டீஸ்பூன்
உப்பு                                          – தேவையான அளவு
மஞ்சள் பொடி                    – 1/2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
ரூமாலி ரொட்டி               – 4

(ரூமாலி ரொட்டியின் செய்முறை முற்பகுதியில் உள்ளது)

தயிர் புதினா சட்னி

1. புதினா இலை                   – 1/2 கப்
2. கொத்தமல்லி இலை  – 1/2 கப்
3. பச்சை மிளகாய்              – 2
4. வெங்காயம்                      – பாதி
5. பூண்டு                                    – 2 பல்
6. தயிர்                                        – 1 1/2 கப்
7. கறுப்பு உப்பு                         – 1 சிட்டிகை
8. சீரகப் பொடி                        – 1/4 டீஸ்பூன்
9. உப்பு                                         – தேவையான அளவு

1 முதல் 5 வரை உள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளவும். பின்
அதனுடன் தயிர், கறுப்பு உப்பு, சீரகப் பொடி, உப்பு கலக்கவும். இதுவே தயிர் புதினா சட்னி.

பராத்தா சாண்ட்விச் செய்முறை

பனீரையும், குடமிளகாயையும் சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை அரை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். மேரினேட் செய்ய கொடுத்துள்ள பொருட்களையெல்லாம் ஒன்றாகக் கலந்து அதில் பனீரையும், குடமிளகாயையும் சேர்த்து 15 நிமிடம் ஊற விடவும். ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் மேரினேட் செய்த பனீரையும், குடமிளகாயையும் போட்டு 5 முதல் 6 நிமிடம் வரை குறைந்த நெருப்பில் அதில் உள்ள நீர் வற்றும் வரை வதக்கவும். ரூமாலி ரொட்டியின் மீது சிறிது நெய்யைத் தடவி அதன் மீது வதக்கி வைத்துள்ள பனீர், குடமிளகாய் கலவையை வைத்து அதன் மீது நறுக்கிய வெங்காயத்தை வைத்து சாட் மசாலா தூவவும். 1 டேபிள் ஸ்பூன் தயிர் புதினா சட்னியை வெங்காயத்தின் மீது தடவவும். பின்னர் ரூமாலி ரொட்டியை இடப்புறம் சிறிது மடிக்கவும், வலப்புறம் சிறிது மடிக்கவும். பின்னர் மேலும், கீழும் அதே போல் மடிக்கவும். இப்போது சதுர வடிவம் கிடைக்கும். அதனை ஒரு தோசைக்கல்லில் போட்டு சிறிது நெய் விட்டு வேக விட்டு இரண்டு பக்கமும் நன்றாக மொறு மொறுப்பாக வெந்தவுடன் இறக்கி ரைதாவுடன் பரிமாறவும்.