புடலங்காய் கட்லெட்

South Indian Recipe: Snake Gourd Cutlet - Cooking Recipes in Tamil


புடலங்காய பார்த்தா பாம்பை பார்த்த மாதிரி அலறுதுங்களா உங்க வீட்டு குட்டீஸ். புடலங்காய் பல சத்துக்களை கொண்டவை. குறிப்பாக வெள்ளரி உடலைக் குளிர வைக்கும் தன்மையுடையதுன்னு சொன்னாலும் சாப்பிட மாட்டேன்ற குழந்தைகளுக்கு, இந்த மாதிரி புடலங்காய கட்லெட் செய்து கொடுத்தீங்கன்னா நொடியில் கட்லெட் ஸ்வாகா..... ஆகிவிடும்.


தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை மாவு - 1 கப்
புடலங்காய் - 1
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 1
பச்சை மிளகாய் - 3
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப


செய்முறை: 

* பச்சை மிளகாய், பட்டை கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

* இத்துடன் பொடியாக நறுக்கிய புடலங்காயைச் சேர்த்து அரைத்து உப்பு, பொட்டுக் கடலை மாவு இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது தண்ணீ­ர் தெளித்து பிசையவும்.

* பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு நன்கு சிவந்ததும் எடுத்தால் கட்லெட் ரெடி.

* சுவை அபாரமாக இருக்கும்.