மைசூர் பாக்

South Indian Sweets: Mysore Pak - Cooking Recipes in Tamil


பெண்கள் பொறுமையாகவும், பக்குமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் மைசூர் பாக். பக்குவமா செய்தா வாயில் போட்டவுடன் கரையும் மைசூர் பாக்கின் நெய்மணமும் சுவையும் அடடா மனதை மயக்கும். ஆனால் தப்பி தவறி பதம் மாறிப்போச்சுனா நல்லா சுத்தியல வச்சு உடைக்க வேண்டியது தான். எங்க, நீங்க எந்த அளவு மிருதுவானவர்கள் என்று உங்கள் குடும்பத்துக்கு காட்டுங்க பார்ப்போம்....!


தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 100 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
தண்ணீ­ர் - 75 கிராம்
நெய் - 100 கிராம்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை

செய்முறை:

* கடலைமாவு, சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து மிருதுவாக கலக்கவும். இதை வாணலியில் ஊற்றி சிறுதீயில் சமைக்கவும்.

* மற்றொரு பாத்திரத்தில் நெய்யை சிறு தீயில் வைக்கவும். சிறிது சிறிதாக சூடான நெய்யை கடலை மாவு கலவையில் சேர்த்து விடாமல் கிளறவும். அது பக்கங்களில் ஒட்டாமல் வரும் வரை இவ்வாறு செய்யவும். சோடா மாவு சேர்த்துக் கிளறவும்.

* ஒரு ட்ரேயில் உட்பகுதியில் நெய்யை தடவி சமைத்த கலவையை அதில் ஊற்றவும்.

* அது சூடாக இருக்கும்போது அதன் மேற்பகுதியில் இணைகோடுகள் வரைந்து துண்டுகளாக வெட்டவும்.

* கடலை மாவு தீய்ந்து போகாமல் இருப்பதற்கு சமைக்கும்போது மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.