முருங்கைக்கீரை வடை

South Indian Recipe: Drumstick leaves Vadai - Cooking Recipes in Tamil


"முருங்கைக்கீரையில் நிறைய சத்துகள் இருக்குனு தெரியும்..., ஆனா எப்படி செய்து கொடுத்தாலும் என் பிள்ளை சாப்பிட மாட்டேங்குதுனு..." புலம்பும் தாய்மார்களே.... இதோ! உங்களுக்கான ஸ்பெஷல் ரெசிபிதான் இந்த முருங்கைக்கீரை வடை. உங்க குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்துப்பாருங்க...."அம்மா இன்னொன்னு வேணும் ப்ளீஸ்.....ஸ்.."னு கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடப் போறாங்க!

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1/2 கப்
ஆய்ந்த முருங்கை இலை - 1 கைப்பிடி
எள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

* அரிசியை ஊற வைத்து, ஊறியதும் கெட்டியாக அரைக்கவும்.

* அதனுடன் முருங்கை இலை, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.

* மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும்.

* பின்பு எள்ளையும் கலந்து நன்கு பிசையவும்.

* வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி பிசைந்த மாவை சிறு உருண்டையாக உருட்டி வடை போல் தட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றி எண்ணெய்விட்டு முறுகலாக வேகவிட்டு எடுக்கவும்.

* இது இரும்புச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்தது. கீரை சாப்பிடாத குழந்தைகள்கூட விரும்பிச் சாப்பிடுவார்கள்.