ஈரல் வறுவல்

South Indian Recepie - Mutton Liver Fry - Cooking Recipes in Tamil

ஈரலை எப்படி சமைத்தாலும் அதன் ருசி அனைவருக்கும் பிடிக்கும். அதே நேரத்தில் விதவிதமாக ஈரலை சமைத்து குடும்பத்தினரை அசத்துங்க...

தேவையான பொருட்கள்:

ஆட்டு ஈரல் - 500 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் - 4
இஞ்சி - பூண்டு விழுது 1 டீஸ்பூன்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணை - 3 டேபிள்ஸ்பூன்
பட்டை, இலை - தாளிக்க


செய்முறை:

ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி.லி தண்­ர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும். தண்ணீ­ர் முழுவதும் சுண்டி விட வேண்டும். மிளகு, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் வைக்க வேண்டும். வெங்காயத்தை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை சிறிது சிறிதாகவும் நறுக்கி வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, இலை தாளிக்க வேண்டும். வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, சிவந்ததும் ப. மிளகாய், கறிவேப்பிலை போட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி - பூண்டு விழுது, ம.பொடி, ஒரு டீ ஸ்பூன் உப்பு மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கியதும் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீ­ர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டும். தண்­ணீர் வற்றியதும் இறக்க வேண்டும்.