மல்டி பொடி சாதம்

South Indian Special: Rice with Dhal Powder - Cooking Recipes in Tamil


லெமன் சாதம், தக்காளி சாதம், தேங்காய் சாதம்ன்னு நிறைய சாத வகைகள் செய்து பார்த்திருப்பீங்க.... மல்டி பொடி சாதம்ன்னு ஒரு சாதம் இருக்கு தெரியுமா? தெரியாதவங்க உடனே செய்து பாருங்க! இந்த சாதம் சுவையாக இருப்பதோடு உடலுக்கு வலுவையும் தரக்கூடியது. 

தேவையான பொருட்கள்:

அரிசி - 250 கிராம்
துவரம்பருப்பு - 1 கப்
கொள்ளு - 25 கிராம்
கடலைப்பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
எள்ளு - 4 டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கைப்பிடி அளவு
மிளயாய் வற்றல் - 4
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு


செய்முறை: 

* அரிசியைக் களைந்து ஒரு பங்கு அரிசிக்கு, 21/2 மடங்கு தண்­ர் என்ற அளவில் விட்டு குக்கரில் 3 விசில் வரவிட்டு இறக்கவும்.

* துவரம்பருப்பு, கொள்ளு, கடலைப்பருப்பு, எள்ளு, உளுத்தம்பருப்பு, மிளகு, மிளகாய்வற்றல் எல்லாம் தனித்தனியாக வெறும் வாணலியில் எண்ணை விடாமல் வறுக்கவும்.

* கறிவேப்பிலையைத் தனியாக வறுக்கவும்.

* எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

* தேவையான உப்பு சேர்த்து, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

* சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

* குறிப்பு:

 இந்தப் பொடியைத் தயாரித்து வைத்துக்கொண்டால் இரவு நேரம் + அவசரத்திற்கு ஒன்றும் இல்லாத நேரத்தில் மிகவும் உதவும். ஒருமாதம் வரை வைத்து உபயோகிக்கலாம்.