முந்திரி மசால் தோசை

South Indian Special: Cashew Masal Dosa - Cooking Recipes in Tamil

தோசையில் மசால் தோசை, ரவா தோசை, நெய் ரோஸ்ட் என்று நிறைய சாப்பிட்டிருப்போம்... ஆனா முந்திரி மசால் தோசை சாப்பிட்டிருக்கீங்களா.... இந்த தோசைய ஒரு தடவை சாப்பிட்டீங்கன்னா, விடவே மாட்டீங்க.... அந்தளவுக்கு மிகவும் ருசியாக இருக்கும். அப்புறம் என்னங்க... உடனே செய்து அசத்த வேண்டியதுதானே!

தேவையான பொருட்கள்:

தோசைக்கு:
தோசைமாவு - 2 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்

மசாலாவுக்கு:
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
கேரட் - 1
பட்டாணி - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
தக்காளி - 2
முந்திரி - 10
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 டீ ஸ்பூன்
உளுந்து - 2 டீ ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


செய்முறை:

* உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து, மசியுங்கள்.

* கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள்.

* எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, முந்திரி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள்.

* பின்னர் கேரட், பட்டாணி சேர்த்து நன்கு வதக்குங்கள்.

* அத்துடன், மசித்த உருளைக்கிழங்கு, தேவையான உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்குங்கள்.

* கடைசியில் கடலை மாவை, சிறிது தண்­ணீரில் கெட்டியாகக் கரைத்து, மசாலாவோடு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

* தோசைக்கல்லை காயவைத்து, ஒரு கரண்டி மாவை எடுத்து, மெல்லிய தோசையாக ஊற்றுங்கள்.

* எண்ணெய், நெய்யைக் கலந்துகொண்டு, தோசையைச் சுற்றிலும் சிறிது ஊற்றுங்கள்.

* நடுவில் சிறிது மசாலாவை பரவினாற்போல வைத்து, தோசையை மடித்து வெந்ததும் எடுங்கள்.

* ஒவ்வொரு தோசை ஊற்றும் முன்பும் சிறிது தண்­ர் தெளித்து, கல்லைத் துடைத்துவிட்டு ஊற்றினால், தோசை பொன்னிறமாக வரும்.