ஸ்பைசி நண்டு மசாலா




தேவையான பொருள்கள்

நண்டு - 1 கிலோ

எண்ணெய் - 1 குழி கரண்டி

இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்

கரம் மசாலா - அரை ஸ்பூன்

வெங்காயம் - 2

தக்காளி - 2

காய்ங்த   மிளகாய்  - 4

மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்

மிளகு - 2 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

மல்லி - 2  ஸ்பூன்

சோம்பு - அரை ஸ்பூன்

தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்

முங்திரி பருப்பு   - 4

உப்பு - தேவைக்கு

கறிவேப்பிலை - மல்லி  - சிறிதளவு








செய்முறை

முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டி நண்டு மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மஞ்சள் பொடி சேர்த்து   கொதிவந்ததும் தண்ணீரை வடிகட்டிவிடவும்


வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் செய்து கொள்ளவும்.


கடாயில்  எண்ணெய் ஊற்றி   காய்ந்ததும்  கறிவேப்பிலை போடவும். வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு, கரம்    மசாலா, தக்காளி, உப்பு சேர்த்து மூடி அடுப்பை   சிம்மில் வைக்கவும்.


மிளகு, மல்லி, சீரகம், சோம்பு லேசாக வறுத்துகொள்ளவும். மிக்ஸியில் மிளகு, சீரகம், மல்லி, சோம்பு தூள் செய்து அத்துடன்   தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.


கடாயில்  வெங்காயம், தக்காளி கிரேவி மசிந்து வந்தவுடன் நண்டை சேர்க்கவும். மூடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.  பின்பு தேவையான அளவு   உப்பு  சேர்க்கவும்.


பின்பு அத்துடன் அரைத்தமசாலா, தேங்காய் கலவை சேர்த்து 15 நிமிடம் வைத்து மசாலா  வாசனை  போனவுடன்   எண்ணெய்   மேலே மிதந்து  வரும்போது    இறக்கவும்.

சூப்பர்    நண்டு மசாலா  ரெடி.

Tag : crab-curry-indian

முட்டை தக்காளி குழம்பு


தேவையானவை

முட்டை – 2
நாட்டுத்தக்காளி – 3
வெங்காயம் – 2
மஞ்சள்தூள், சோம்பு கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
பட்டை சிறிய துண்டு
முந்திரிப்பருப்பு – 4
தேங்காய்த்துருவல் – 2 ஸ்பூன்
கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் சிறிதளவு


செய்முறை:

சோம்பு, முந்திரிப்பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி 7 நிமிடம் கொதிக்க விடவும்

பிறகு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு திக்கானதும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

சிக்கன் சுக்கா - Chicken Sukka

உணவு


தேவையான பொருட்கள்:


சிக்கன் –  அரை கிலோ

பெரிய வெங்காயம் – 2

இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்

கறிமாசால் தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரைஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1  ஸ்பூன்

மிளகு                  - 2 ஸ்பூன்

சீரகம்               -   2 ஸ்பூன்

மல்லித்தூள் –  2  ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவைக்கு

மல்லி இலை   - சிறிதளவு

பட்டை , கிராம்பு   - சிறிதளவு



செய்முறை :


முதலில் கோழிக்கறியை சுத்தம் செய்து   சிறிய துண்டுகளாக  நறுக்கி கழுவி  கொள்ளவும்.

பின்பு மிளகு ,சீரகத்தை மிக்சியில் போட்டு நன்கு பொடித்து வைத்து கொள்ளவும்.

கடாயில்   எண்ணெய் ஊற்றி சூடாக்கிய‌ எண்ணெயில்   பட்டை , கிராம்பு    போட்டு தாளித்து  நறுக்கிய வெங்காயம்,சேர்த்து நன்றாக வதக்கவும்.


நன்றாக வதக்கிய பின் இஞ்சி, பூண்டு, சேர்த்து வதக்கவும்   இஞ்சி பூண்டு வதக்கியவுடன்  கோழிக்கறி சேர்த்து பிரட்டவும்


பின்பு மசாலா தூள்கள் அனைத்தையும்  சேர்த்து  நன்கு வதக்கவும்.
மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பிரட்டி  கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு போட்டு   கடாயை  மூடி   நன்கு  வேக விடவும்.  

 கோழி  ஓரளவு  வெந்தவுடன்    பொடித்து வைத்துள்ள மிளகு சீரகத்தை போட்டு    நன்கு  பிரட்டி விடவும்.   


 நன்றாக சுண்டி கோழிக்கறி   நன்கு  வெந்து வந்ததும்   இறக்கி  நறுக்கிய மல்லி இலை தூவவும். சுவையான சூப்பர் சிக்கன் சுக்கா ரெடி.


Tag : Chicken Sukka,sunday special,south indian food

பெப்பர் பட்டர் சிக்கன் மசாலா - Pepper Chicken Gravy



தேவையான பொருட்கள்:

சிக்கன்   - அரை கிலோ

மிளகு -  20

இஞ்சி  -  1 துண்டு

பூண்டு   - 3 பல்

மஞ்சள் தூள்   - அரை  ஸ்பூன்

தணியா தூள்  - 1   ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

பெரிய  வெங்காயம்  -2

வெண்ணெய் - 100 கிராம்

உப்பு   -தேவையான அளவு




செய்முறை:

மிளகைத் தூள் செய்து இஞ்சி  ,பூண்டு   மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் கலந்து துவையல் போல் பிசைந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை  கழுவிய சிக்கனுடன் சிறிது உப்பு சேர்த்து  15 நிமிடம் ஊற வைக்கவும்.

வெங்காயத்தை பொடியாக  நறுக்கி வைத்து கொள்ளவும்.

பின்பு ஊற வைத்த  சிக்கனை  கடாயிலோ அல்லது குக்கரிலோ போட்டு  2 விசில் விட்டு  வேக வைத்து  இறக்கவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து   அதில் வெண்ணெய்யை   ஊற்றி  காய்ந்ததும்  அரிந்த வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும். வதங்கியவுடன்

இறக்கி வைத்திருக்கும் சிக்கன் குழம்பை கடாயில் ஊற்றி, தேவையான  உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க  வைத்து  இறக்கவும்

பெப்பர் படடர்  சிக்கன் மசாலா தயார்.

Tag :  Pepper Chicken Gravy,NonVeg,Sunday Special

செட்டிநாடு சிக்கன் குழம்பு - Chettinad chicken kulambu


தேவையான  பொருள்கள்


சிக்கன்  - ஒரு கிலோ

வெங்காயம் - 2

தக்காளி - 4

மஞ்சள்பொடி - அரை ஸ்பூன்

மிளகாய்ப்பொடி - 3  ஸ்பூன்

மல்லிப்பொடி - 4 ஸ்பூன்





அரைக்க

மிளகு - ஒரு  ஸ்பூன்

சீரகம் - ஒரு  ஸ்பூன்

சோம்பு - ஒரு  ஸ்பூன்

பூண்டு - 6 பல்

இஞ்சி - ஒரு துண்டு

வெங்காயம் - ஒன்று

உப்பு - தேவையான அளவு


தாளிக்க 

நல்லெண்ணெய் - 4  ஸ்பூன்

பட்டை - 2

கிராம்பு - ஒன்று

அன்னாசிப்பூ - 2

சோம்பு - அரை  ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி, வெங்காயாம் சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி   சேர்த்து சிக்கனுடன் பிசறவும்.

கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி,  பிசறிய சிக்கனை  சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.

வதங்கியதும் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.   குழம்பு கொதித்து வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்

Tag : Chettinad chicken kulambu, South Indian, Chicken Special

சோயா ஐஸ்கிரீம்

 சோயா ஐஸ்கிரீம்

சோயா ஐஸ்கிரீம் தேவையான பொருட்கள்




சோயா பொடி                        – 1/4 கப்

முந்திரிப்பருப்பு                    – 1/4 கப்

பால்                                           – 21/2 கப்

சீனி                                            – 1/2 கப் + 1 டேபிள் ஸ்பூன்

கார்ன் ஃப்ளார்                       – 1 டீஸ்பூன்

கிரீம்                                        – 2 டேபிள் ஸ்பூன்

வெனிலா எசன்ஸ்             – சில துளிகள் (அ) ஏலக்காய், குங்குமப்பூ

சோயா ஐஸ்கிரீம் செய்முறை

சோயா சங்க்ஸை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இது தான் சோயா பொடி. சோயா பொடியை 1/4 கப் பாலிலும், முந்திரிப் பருப்பை 1/4 கப் பாலிலும் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய முந்திரியை மிக்ஸியில் விழுதாக அரைத்து, அதோடு ஊற வைத்த சோயாவையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஏலக்காய் வாசனை விருப்பமுள்ளவர்கள், முந்திரி, சோயாவுடன் குங்குமப்பூ, ஏலக்காயையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மீதியுள்ள 2 கப் பாலை 1 கப் ஆகும் அளவு காய்ச்சி வைத்துக் கொள்ளவும். கார்ன் ஃப்ளாரை சிறிது ஆறிய பாலில் கரைத்து காய்ச்சிய பாலுடன் சேர்த்து நன்றாகக் கொதித்த பின் இறக்கி வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும். பாலுடன் அரைத்த சோயா முந்திரி விழுது, கிரீம், பொடித்த சர்க்கரை இவற்றை சேர்த்து சிறிது கொதிக்க விட்டு, ஆறிய பின் மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்து நன்கு கலந்து கொள்ளவும். வெனிலா ருசி விரும்பினால் வெனிலா எசன்ஸ் சேர்த்து ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைக்கவும். பின் அதை ஃப்ரீசரில் இருந்து எடுத்து திரும்பவும் மிக்ஸியில் போட்டு அடித்து ஐஸ்கிரீம் கப்புகளில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து செட் செய்யவும். ஐஸ்கிரீம் செட்டானவுடன் எடுத்து பரிமாறவும்.

சாக்கோ நட் ஐஸ்கிரீம்

 
 
தேவையான பொருட்கள்
 
பால்               - 1 கப்
 
கிரீம்              - 3 கப்
 
முட்டை வெள்ளை - 6
 
பாதாம் பருப்பு      - 4
 
பொடித்த சர்க்கரை - 7 டேபிள் ஸ்பூன்
 
வெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
 
கொக்கோ பவுடர்   - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை

  பாதாம் பருப்புகளை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.

 6 முட்டையின் வெள்ளையை எடுத்துக் கொண்டு நன்கு நுரை வரும் வரை அடிக்கவும். 

சர்க்கரையை சிறிது சிறிதாகச் சேர்த்து நுரைக்க கலக்கவும்.

 பாலையும் கொக்கோ பவுடரையும் கலந்து மிதமான தீயில் கிளறிக்   கொண்டே இருக்கவும்.

 கலவை கெட்டியாக ஆகும் வரை கிளறவும். 

கிரீமை நன்றாகக் பீட் செய்து பால் கலவையுடன் கலக்கவும். 

எசன்ஸையும் கலந்து மெதுவாக கலக்கவும். 

அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையையும் கலக்கவும். 

எல்லாக் கலவையையும் ஒன்றாகக் கலக்கவும். 

இந்தக் கலவையை ஃப்ரிஸரில் வைத்து பாதி கெட்டியானதும் வெளியே எடுக்கவும். 

(உடைத்து வைத்துள்ள பாதாம் பருப்புகளை வெறும் வாணலியில் வறுக்கவும்). 

அதனுடன் பாதாம் பருப்புகளை சேர்த்து திரும்பவும். ஃப்ரிஸரில் வைத்து செட் செய்யவும்.

கத்தரிக்காய் பச்சடி

கத்தரிக்காய் பச்சடி 
 
 
 
கத்தரிக்காய் பச்சடி தேவையான பொருட்கள்
 

கத்தரிக்காய்                            - 2 பெரியது
 
உருளைக்கிழங்கு                 - 1 மீடியம்

பச்சை மிளகாய்                      - 5 கீறியது

பெரிய வெங்காயம்               - 1 நறுக்கியது

தக்காளி                                      - 1 நறுக்கியது

கறிவேப்பிலை                        - சிறிது

பாசிப்பருப்பு                              - 1/2 கப்

மஞ்சள் பொடி                          - சிறிது

புளி                                               - சிறிய எலுமிச்சையளவு






கத்தரிக்காய் பச்சடி தாளிக்க

கடுகு, உளுந்தம் பருப்பு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
 
 

கத்தரிக்காய் பச்சடி செய்முறை
 

முதலில் பாசிப்பருப்பை சிறிது மஞ்சள் பொடி போட்டு வேக வைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயையும் உருளைக்கிழங்கையும் சிறு சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் முதலியவற்றை வெந்த பருப்பில் போட்டு வேக விடவும். நன்கு வெந்ததும் புளிக்கரைசல், உப்பு போட்டு கொதிக்க விடவும். கடைசியாக ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து போடவும். இது இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

தூதுவளை துவையல்

 தூதுவளை துவையல்

தூதுவளை துவையல் தேவையான பொருள்கள்
                     தூதுவளை இலை           - 2 கப்
                     புதினா                                   - 1 கப்
                     பூண்டு                                   - 4 பல்
                     இஞ்சி                                    - 1/2 இஞ்
                     சிறிய வெங்காயம்          - 10 தோலுரித்ததும்
                     சிவப்பு மிளகாய்               - 6
                     எண்ணெய்                         - 2 டீஸ்பூன்
                     தாளிக்க                              - கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம்
                     புளி                                       - கோலிக்குண்டு அளவு
                     தேங்காய்                          - 2 ஸ்பூன் துருவியது
                     உப்பு                                    - தேவையான அளவு.
தூதுவளை துவையல் செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து பின் காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும், சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி பின் தேங்காய் பூவையும் போட்டு வதக்கவும். கடைசியாக தூதுவளை இலை, புதினா இலை போட்டு வதக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.

லஸ்ஸி



தேவையானவை:

புளிக்காத கெட்டித் தயிர் - 1 கப்.

ஃப்ரெஷ் க்ரீம் - 1 ஸ்பூன்.

சர்க்கரை - 50 கிராம்.

ஐஸ் கட்டிகள் - சிறிதளவு.


செய்முறை

புளிக்காத கெட்டித் தயிர், சர்க்கரை, க்ரீம் சேர்த்து அரைத்து ஐஸ் கட்டிகள் சேர்த்து குளிர வைத்துப் பரிமாறவும்.

லெமன் சர்பத் - Lemon Juice



தேவையானவை


எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன்.
 
 உப்பு - 1/4 ஸ்பூன்.

தண்ணீர் - 1 தம்ளர்.

நன்னாரி எசன்ஸ் - 1 துளி.



செய்முறை:

தண்ணீரில்  உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். இவற்றில் எலுமிச்சைச் சாறு, நன்னாரி எசன்ஸ் சேர்த்து குளிர வைத்துப் பின் அருந்தவும்.

தக்காளி ஜீஸ் - Tomato Juice




தேவையானவை.

தக்காளி                 - அரை கிலோ.

தண்ணீ ர்               - 2 கப்.

சர்க்கரை               - கால் கப்.

லெமன்                 -  தேவைக்கு.

கொத்தமல்லி      - சிறிதளவு.

உப்பு                      - 1 சிட்டிகை.







செய்முறை:

தக்காளியைக் கழுவி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி 4 டம்ளர்  அளவு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் 2 கப் தண்ணீ ர், கால் கப் சர்க்கரை, லெமன், உப்பு போட்டுக் கலந்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

Tag : tomato juice,summer,tamil

ஜிஞ்சர் ஜீஸ்

                          





தேவையானவை


ஜிஞ்சர் ஜீஸ்         - அரை கப்.
லைம் ஜீஸ்          - அரை கப்.
சர்க்கரை               - 1 கப்.
உப்பு                       - தேவைக்கு.
தேன்                      - தேவைக்கு.
தண்ணீ ர்              - 2 கப்.


செய்முறை:

இஞ்சி ஜீஸை 2 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்து ஆற வைக்கவும். இத்துடன் லெமன் ஜீஸ் விட்டு சர்க்கரை, உப்பு கலந்து சிறிதளவு தேன் சேர்த்து பரிமாறவும்.

ஃப்ருட் மிக்சர் ஜீஸ்



தேவையானவை

தேவையானவை

  

 தேவையான பொருட்கள்:

பைனாப்பிள் ஜீஸ் - 5 கப்.

ஆரஞ்சு ஜீஸ் - 2 கப்.

இஞ்சி ஜீஸ் - 1 ஸ்பூன்.

சில்சோடா - 4 கிளாஸ்.
 
கமலா ஆரஞ்சு சுளை - அரை கப்.

ஆப்பிள் துருவல் - அரை கப்.

பைனாப்பிள் - அரை கப்.
 
சர்க்கரை - 3/4 கப்.

உப்பு - தேவைக்கு.
 
 செய்முறை:

பைனாப்பிள், ஆரஞ்சு, இஞ்சி ஜீஸ்களைக் கலக்கவும். இத்துடன் சில்சோடா, கமலா ஆரஞ்சு, பைனாப்பிள் துண்டுகள் ஆப்பிள் துருவல், சர்க்கரை, உப்பு கலந்து பரிமாறவும்.

யோகர்ட் சாலட்



தேவையானவை


தயிர் - 1 கப்.

ஸ்ட்ரா பெர்ரி - 1 கப்.

சர்க்கரை - 50 கிராம்

ஸ்ட்ரா பெர்ரி எசன்ஸ் - 1 துளி


செய்முறை:

பழத்தையும், சர்க்கரையும் சேர்த்துக் அரைத்து அதில் எசன்ஸ் சேர்த்த தயிரில் பழக்கூழை கலந்து குளிர வைத்துப் பரிமாறவும்.

Tag : yogurt salad

பைனாப்பிள் ஜுஸ் - Pineapple Juice


தேவையான பொருள்கள்

அன்னாசிப்பழம் -1 

சா்க்கரை -தேவைக்கேற்ப
 
தண்ணீர்-1லிட்டர்
 
சிட்ரிக்அமிலம் -2கிராம்

கலர் பொடி -1/2 ஸ்பூன்
 
எசன்ஸ் -கால் ஸ்பூன்


செய்முறை   பழத்தின் மேல்பாகத்தையும்,தோலைச் சுற்றியுள்ள இலைகளையும் அகற்றி நல்ல தண்ணீரில் கழுவியபின், கத்தியால் தோலை அகற்றவும் .

பழத்தின் மேலுள்ள குழிபோன்ற மொக்குகளையும்,கெட்டுப்போன பகுதிகளையும் ஒதுக்கிவிட்டு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கூழாக்கவும். சாற்றைப் பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும்.

மேலும் சா்க்கரையைத் தண்ணீரில் கலந்து பாகு வைத்து அதை வடிகட்டிய சாறுடன் கலந்து கொள்ளவும். சிட்ரிக் அமிலத்தையும் சிறிது தண்ணீரில் கலந்து சாற்றில் சோக்கவும்

 அத்துடன் நிறப் பொடியையும் எசன்ஸையும் கலந்து கொதிநீரில் சுத்தப்படுத்தப்பட்ட பாட்டில்களில் ஊற்றி காற்றுப்புகா வண்ணம் அடைத்து சேமித்து வைக்கவும்..

Tag : pineapple juice,Summer,Tamil

முட்டை சீஸ் பரோட்டா


தேவையானவை :

சீஸ் - 25 கிராம்

கொத்தமல்லித்தழை - 1/2 கப்

புதினா இலை - 1/4 கப்

பச்சை மிளகாய் - 2

மூன்று முட்டை - 3

உப்புத்தூள் - தேவையானவை

மிளகாய்த்தூள் - சிறிது

சமையல் எண்ணெய் - சிறிது


செய்முறை :


25 கிராம் சீஸை மிக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும், 1/2 கப் கொத்தமல்லித்தழை, 1/4 கப் புதினா இலை, 2 பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மூன்று முட்டைகளைத் தேவையான உப்புத்தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள் கலந்து முட்டை அடிக்கும் கருவியால் அடித்துக் கொள்ளவும்.

இத்துடன் நறுக்கிய பொருட்களை கலந்து கொள்ளவும். வாணலியில் 5 மேஜைக்கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முட்டைக் கலவையை ஊற்றிக் கிளறி முட்டை வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும். கோபி பரோட்டாவிற்கு மாவு தயாரித்தது போல் தயாரித்துக் கொள்ளவும்.

அதே முறையில் காலிஃப்ளவருக்குப் பதிலாக முட்டையையும், சீஸையும் தூவிப் பரோட்டாக்கள் செய்து சமையல் எண்ணெய்யை காய வைத்து சிவக்க வறுத்து எடுக்கவும்.

ஈஸி முட்டை புலாவ்

Egg Pulaow - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்:-

புலாவ் அரிசி - 500 கிராம்

வெங்காயம் - 3

முட்டை - 4

பச்சை மிளகாய் - 3

மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

நெய் - 2 மேஜைக்கரண்டி


செய்முறை:-

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். உப்பு, பச்சைமிளகாய், மஞ்சள்பொடி ஆகியவற்றை முட்டையோடு சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும். நெய் சூடானவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பொன்னிறமானவுடன், முட்டை கலவையை சேர்த்து வதக்கவும். முட்டை வேகும் போது நன்றாக கிண்டவும். முட்டை வெந்து கட்டிகளானவுடன் இறக்கி வைக்கவும். அரிசி எடுத்து உதிரியாக சாதம் செய்துக் கொள்ளவும். சாதம் சூடாக இருக்கும்போது சமைத்த முட்டையை சேர்த்து கலக்கவும். உடனே பரிமாறவும்.


Chettinadu Samayal Premium - Android Apps on Google PlaySamayal - Android Apps on Google PlaySamayal Samayal with Venkatesh Bhat 02/07/15 - YouTubeSamayal Samayal with Venkatesh Bhat - Episode 23 | 01/31/15 ...என் சமையல் அறையில்Tamil Samayal.NetAachi Samayal
தமிழ் சமையல் Tamil Samayal - Chennai, Tamil Nadu ...SAMAYAL ULAGAMCookery | சமையல் | சமையல் குறிப்புகள் ...
Samayal - The Pleasures of South Indian Vegetarian Cooking.: Viji ...Kalyana Samayal Saadham (2013) - IMDbKalyana Samayal Saadham - Wikipedia, the free encyclopediaAmma Samayal | Tamil Vegetarian RecipesTubetamil Samayal | Tubetamil.comஇல்லம் | தமிழ் நண்பர்கள் Tamil Friends
மாலை மலர் | Arokiya Samayal: Daily Health news paper in ...Nammathu SamayalEn veetu samayal.com1500+ Tamil Samayal Kuripukal - Android Informer. Tamil Samyal ...Samayal Manthiram October 29 - Video DailymotionSamayal.com • Index pageReview: Un Samayal Arayil is a gourmet's delight - Rediff.com MoviesSAMAYALSAMAYALThirai Video - Samayal ManthiramSamayal Veg and.. | 1mobile.comSamayal DiaryKadai Crust - Amma Veetu Samayal, Indiranagar, Bangalore - ZomatoAmazon.in: Buy Festival Samayal (Winner Gourmand World ...SASI'S KITCHENDaily Samayal Recipes
Un Samayal Arayil (Music review), Tamil – Ilayaraja by Milliblog!Samayal Blog - Namma Veetu Chettinad Samayal Kurippu - Indian ...Un Samayal Arayil Movie Review - Behind WoodsSun Samayal: HomeSamay Alvarez (@Samayal) | TwitterPostpartum Recipes (Pathiya samayal) | Vidhya's Vegetarian KitchenKalyana Samayal Sadham: Scenes from an arranged marriage ...Movie review 'Un Samayal Arayil': Prakash Raj is surely a family ...Kalyana Samayal Saadham Movie Review, Trailer, & Show timings ...Srardham(Thevasam) Recipes/Samayal | Subbus KitchenUn Samayal Arayil Movie Review - Behind WoodsSun Samayal: HomeSamay Alvarez (@Samayal) | TwitterPostpartum Recipes (Pathiya samayal) | Vidhya's Vegetarian Kitchen
Kalyana Samayal Sadham: Scenes from an arranged marriage ...Movie review 'Un Samayal Arayil': Prakash Raj is surely a family ...Kalyana Samayal Saadham Movie Review, Trailer, & Show timings ...Srardham(Thevasam) Recipes/Samayal | Subbus Kitchen

முட்டை உருளை மசாலா

Egg Potato Masala - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்:-

முட்டை - 2

உருளைக்கிழங்கு - 200 கிராம்

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன் (தூள்)

வினிகர் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)

எண்ணெய் - 15 கிராம்


செய்முறை:-

முட்டையை நன்கு வேக வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். எண்ணெயில் மிளகு, சீரகம் வறுத்து, அதில் நறுக்கிய வெங்காயத்தில் பாதியை போட்டு வதக்கிக் கொள்ளவும். இப்போது உருளைக்கிழங்கு, முட்டையை போட்டு வதக்கவும். சிறிது தண்ணீர் விட்டு, உப்பு போட்டு வதக்கவும். பிறகு மீதியுள்ள வெங்காயத்தை போட்டு பிரட்டி, வினிகர் சேர்த்து இறக்கவும்.
egg-potato-masala

தேங்காய் இனிப்பு

Cocoanut Sweet - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்:-


அரிசி - 250 கிராம்

வெல்லம் - 200 கிராம்

தேங்காய் துருவல் - 1 கப்

ஏலக்காய்த்தூள் சிறிதளவு

எண்ணை - தேவையான அளவு


செய்முறை:-

அரிசியை முதல் நாள் இரவே ஊறவைத்து அடுத்த நாள் அரைக்க வேண்டும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அளவான தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். வெல்லத்தண்ணீர் கொதித்ததும் தூசு, மண் போக வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி தேங்காய் துருவலைக் கொட்டி கிளற வேண்டும்.


பிறகு கீழே இறக்கி ஏலக்காய் தூள், அரிசிமாவு சேர்த்து நன்கு கிளற வேண்டும். சிறிது ஆறியதும் உருண்டைகளாக பிடித்து காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும். இதுவே தேங்காய் இனிப்பு ஆகும். இதை ஒரு வாரம் வரையில் வைத்து கூட உபயோகிக்கலாம்.

சேனைக்கிழங்கு கட்லட்


தேவையான பொருட்கள்:-

சேனைக்கிழங்கு - 1கப் (கேரட் துருவலில் துருவியது)

பொட்டுக்கடலை மாவு - 2 ஸ்பூன்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

இஞ்சி - சிறு துண்டு (பொடியாக நறுக்கியது)

காரத் தூள் - 1/4 ஸ்பூன்

மசாலாத் தூள் - 1/4 ஸ்பூன்

கறிவேப்பிலை - தேவையான அளவு

ரஸ்க் தூள் - 2 ஸ்பூன்

செய்முறை:-

சேனை கிழங்கை துருவி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

அத்துடன் பொட்டுக்கடலை மாவை சேர்த்து, வெங்காயம், இஞ்சி, உப்பு, காரத்தூள், மசாலாத் தூள், கறிவேப்பிலை என போட்டு பிசையவும் பிசைந்த மாவை வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

பொரித்தெடுத்த கலவையை, ரஸ்க், தூளில் புரட்டி எடுக்கவும், தோசைக் கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டுத் திருப்பி போட்டு எடுத்து ரஸ்க் தூளில் புரட்டி எடுத்து பரிமாறலாம்.

பிரட் கட்லட்

Bread cutlet - Cooking Recipes in Tamil


தேவையான பொருள்கள்:-

சால்ட் பிரட் பெரிய சைஸ் - 6


உருளை கிழங்கு வேகவைத்து உதிர்த்தது - 3 கப்

கேரட், பீட்ரூட் துருவியது - 2 கப்

மஞ்சள் பொடி, காரட் பொடி, கரம் மசாலா, உப்பு - தேவையான அளவு
தயிர் (புளிப்பில்லாதது) - 3 கப்

சர்க்கரை - 2 டீஸ்பூன்

கொத்துமல்லி பொடியாக நறுக்கியது - 1/2 கப்

சீரகப்பொடி - 1ஸ்பூன்

பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்


செய்முறை:-


முதலில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சிரகம் தாளிக்கவும்.

 நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்கவும்.

 பட்டாணி, கேரட், பீட்ரூட் துருவல் சேர்த்து மிதமான தீயில் வதக்கி சிறிது நேரம் மூடிவைக்கவும்.

பின்பு கரம் மசாலா, காரப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு இவைகளை சேர்த்து நன்றாக வதக்கியவுடன் உதிர்த்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

 பிரட்டை தண்ணீரில் நனைத்து இரண்டு கைகளுக்குகிடையே வைத்து நன்றாக பிழியவும்.


இரண்டு பிரட்டிற்கு இடையிலோ அல்லது ஸ்லைஸின் நடுவிலோ காய்கறிகளை வைத்து நன்கு மூடி வைக்கவும் தேவைக்கேற்ற வடிவத்தில் (உருண்டையாகவோ, தட்டையாகவே செய்து, எண்ணெயில் சிவக்கும் பதத்தில் பொரித்தெடுக்கவும்).


தயிரில் சர்க்கரைச் சேர்த்து நன்றாகக் கடைந்து பொரித்து வைத்திருக்கும் கட்லெட் மீது இரண்டு டீஸ்பூன் அதன் மேல் சீரகப் பொடி கொத்துமல்லி தூவி பரிமாறவும்.

உருளை மசாலா

Tomato Masala - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்:-


உருளைக்கிழங்கு - 4

தக்காளி சாறு

நெய் - தலா அரை கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவைக்கு


அரைக்க:-


தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள்

கசகசா - தலா 2 டீஸ்பூன்

தனியா, கரம் மசாலா - தலா 1 டீஸ்பூன்

பூண்டு - 8


செய்முறை:-


உருளைக்கிழங்கை தோல் சிவி சற்று பெரிய துண்டுகளாக்குங்கள்.

 உப்பு சேர்த்து கொதிக்கும் நீரில் கிழங்கை சேர்த்து, வெந்ததும் நீரை வடியுங்கள்.

எண்ணெயில், இந்தக் கிழங்கைப் பொரித்தெடுங்கள்.

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரையுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, அரைத்த விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள்.

 இதனுடன் தக்காளி சாறு, உப்பு, உருளைக்கிழங்கு, சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

சாதம் முதல் சப்பாத்தி வரை எல்லாவற்றுக்கும் ஈடுகொடுக்கும் அசத்தலான அயிட்டம், இந்த மசாலா!

தயிர் மசாலா

Curd Masala - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்:-

கெட்டி தயிர் - 2 கப்

தக்காளி - 3

கடலைமாவு - கால் கப்

நெய் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

பூண்டு - 6 பல்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


அரைக்க:-

பூண்டு - 5

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - 2 டீஸ்பூன்

மல்லித்தழை - ஒரு கைப்பிடி

முந்திரி - 6


செய்முறை:-

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்கு அரையுங்கள்.

அரைத்த விழுதுடன், தயிர், கடலை மாவு, உப்பு சேர்த்து, கட்டியில்லாமல் கரையுங்கள்.

தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள்.

1 டேபிள் ஸ்பூன் எண்ணெய், நெய் சேர்த்துக் காயவைத்து, தக்காளித் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்குங்கள்.

இதனுடன், விழுதுடன் கலந்து வைத்திருக்கும் தயிர் கலவைச் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சப்பாத்தி, பூரிக்கான சுவை மிகு சைட்டிஷ் இது.

ஆப்பிள் பகோடா

Apple Pakora - Cooking Recipes in Tamil


துருவிய ஆப்பிள் - ஒன்றரை கப்
கடலை மாவு - முக்கால் கப்
அரிசி மாவு - அரை கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க


செய்முறை:-

மேலே கூறிய எல்லாப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து, நன்றாகப் பிசைந்துகொள்ளவும் ஆப்பிளில் இருக்கும் நீர்ச்சத்தே போதுமானது தேவை என்றால், சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையலாம்.

பிறகு எண்ணெயைக் காயவைத்து, பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு பகோடாக்களாகக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாக வெந்ததும் அரித்தெடுத்து, சூடாகப் பரிமாறவும். பண்டிகைக் காலத்துக்கு மட்டுமல்ல, மழைக்காலத்துக்கும் ஏற்ற ஸ்நாக்ஸ் இது. ஆப்பிள் சிஸனில் செய்து அசத்தலாம்.

வாழைப்பழ சாக்லேட்

Banana Chocolate - Cooking Recipes in Tamil


கனிந்த வாழைப்பழம் - 10

பால் பவுடர் - அரை கப்

சர்க்கரை - முக்கால் கப்

கொக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் - அரை கப்

நைஸாக சீவிய முந்திரி

பிஸ்தா - 4 டீஸ்பூன்



செய்முறை:-


  • கொக்கோ பவுடர், பால் பவுடர் இரண்டையும் சலித்து வைத்துக் கொள்ளவும். 

  • வாழைப்பழத்தை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். 

  • முந்திரி, பிஸ்தா பருப்புகளை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

  • அடி கனமான, வாயகன்ற ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து, 

  • வாழைப்பழக்கூழ், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். 

  • சுருண்டு வந்ததும், பால் பவுடரைத் தூவி, வெண்ணெயைப் போட்டுக் கிளறவும், தீயைக் குறைத்து, கலவை கையில் ஒட்டாத பதம் வரும்வரை கிளறவும்.

  • பிறகு, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி சமமாக்கி, முந்திரி, பிஸ்தா துண்டுகளை மேலே தூவவும். 

  • ஆறிய பின் வில்லைகள் போடவும்.

  • ஒரு வாரம் வரை இந்த சாக்லேட்டை வைத்திருக்கலாம்.

  •  வாழைப்பழம் சாப்பிடாத குழந்தைகளுக்குக் கூட மிகவும் பிடிக்கும்.