சோயா தேங்காய்ப் பால் பாயசம்

Soya coconut milk payasam - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்: 

சோயா சரிக்ஸ் - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1 1/2 கப்
முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்பு - தலா 1 டீஸ்பூன்
சீனி - 150 கிராம்
ஏலக்காய் - 4
திராட்சை - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ - விருப்பப்பட்டால் சிறிதளவு
நெய் - 100 கிராம்
பால் - 1/4 லிட்டர்


செய்முறை:

முதலில் சோயா சரிக்ஸ்கை வெதுவெதுப்பான நீங்ல் ஊறவிட்டு, பிழிந்து மிக்ஸியில் இட்டு உதிர்த்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவலை, சிறிய தண்ணீர் சேர்த்து திக்கான பால் எடுத்துக் கொள்ளவும். (மிக்ஸியில் இட்டு அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும்) பாதாம், பிஸ்தா, முந்திரியைப் பொடியாக நறுக்கி, தனித்தனியே நெய்யில் வறுத்து திராட்சையைச் சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் பாலை விட்டு சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு அத்துடன் சோயா சரிக்ஸை போட்டு நன்கு வேகவிடவும். சோயா நன்கு வெந்ததும், சீனியைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும், வடிகட்டி எடுத்து வைத்திருக்கும் தேங்காய்ப்பால் சேர்த்து சூடானதும் இறக்கி விடவும். கொதிக்க விடக்கூடாது.

நெய் விட்டு வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாமைச் சேர்த்து இறக்கி ஏலக்காயைத் தட்டிப் போட்டு, குங்குமப்பூ சேர்த்து பரிமாறவும். அருமையான புரதச்சத்து நிறைந்த பாயாசம் ரெடி.