மக்காச்சோள புலாவ்


Corn Pulav - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கப்
தேங்காய்ப் பால் - 2 கப்
அமெரிகேன் இனிப்பு மக்காச் சோளம் - 3
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பிரியாணி இலை - 1
பட்டை, கிராம்பு சிறிதளவு - அரைத்துக் கொள்ளவும்
சிகப்பு மிளகாய் - 4
பச்சை மிளகாய் - 5
கரம் மசாலா பொடி - 1 டீஸ்பூன்
புதினா - சிறிய கட்டு
பூண்டு - 5 பல்
இஞ்சி - கால் அங்குலத் துண்டு
துருவல் தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 10
கொத்தமல்லி - 1 கட்டு


செய்முறை:

அரிசியைக் கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு, அரிசியை கால் டீஸ்பூன் நெய்யில் இரண்டு நிமிடத்திற்கு வதக்கவும். மக்காசோளத்தை உப்பு சேர்த்த தண்ணீரில் போட்டு 10 லிருந்து 15 நிமிடங்கள் வரை பிரஷர் குக்கரில் வெயிட் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். பிரஷர் பானிலோ, குக்கரிலோ எண்ணெய் விட்டு சூடாக்கி பிரியாணி இலை, பட்டை, இலவங்கம் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் அரைத்த விழுது சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். பிறகு வேக வைத்த மக்காச் சோள விதைகளை அதில் மெதுவாகக் கலந்து தேங்காய்ப் பாலையும் விடவும். கலவை கொதிக்கத் துவங்கியவுடன் உப்பையும், அரிசியையும் சேர்க்கவும். நன்றாகக் கலந்து மறுபடியும் கொதிக்க ஆரம்பித்தவுடன் மூடியால் மூடி வைக்கவும். குறைந்த தணலில் வைத்து உடனே வெயிட் போடவும். பத்து நிமிடங்களுக்கு குறைந்த தணலிலேயே வைக்கவும். பிறகு, அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறவிடவும். வெயிட்டை எடுத்து பின் கலந்து விடவும். பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றி வறுத்த முந்திரிப் பருப்பால் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.