கொண்டைக்கடலை புதினா சாதம்

Pudhina Rice - Cooking Recipes in Tamil

தேவையானவை:-

கழுவி ஊறவைத்த அரிசி - 1 கப்.
ஊறவைத்த கொண்டைக்கடலை - 1 கப்.
எல்லா காய்கறிகளும் நறுக்கியது - 1 கப்.
வெங்காயம் - 1
பிரிஞ்சி இலை - 1இ
நறுக்கிய புதினா இலைகள் - 1 கைப்பிடி.
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்.
எண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு


செய்முறை:-

நான்ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெயைச் சுடாக்கி வெங்காயம், பிரிஞ்சி இலை இவற்றை வதக்கவும். பிறகு அதில் காய்கறிகள், அரிசி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். அரை வேக்காட்டில் கொண்டைக்கடலை, புதினா இலை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி சிறு தீயில் நன்றாக வேக விடவும். இது முழுமையான உணவாகும்.