அடை குருமா

Adai Guruma - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள் 

அடைக்கலவை - 1 கப்
சிறிய வெங்காயம் - 10
தக்காளி - 2
பூண்டு- 10 பல்
லவங்கப்பட்டை - 4 துண்டுகள்
தேங்காய்த்துருவல் - 1 கைப்பிடி
பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் -2
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் தேவையான அளவு.


செய்முறை:

வெங்காயம், பூண்டு தோல் உரித்து அரிந்து கொள்ளவும் வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை இவற்றைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

இதிலே வெங்காயம், பூண்டு இவற்றைப் போட்டு வதக்கவும். வதக்கிய எல்லாவற்றையும் தேங்காய்த் துருவல், இஞ்சியுடன் சேர்த்து நீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகைத் தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். அடைக்கலவை, கீறிய பச்சை மிளகாயை சேர்த்து அரை டம்ளர் நீர் விட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். சப்பாத்திக்கு தொட்டுச் சாப்பிட கமகம அடை குருமா தயார்!