செட்டிநாடு சிக்கன் குழம்பு - Chettinad chicken kulambu


தேவையான  பொருள்கள்


சிக்கன்  - ஒரு கிலோ

வெங்காயம் - 2

தக்காளி - 4

மஞ்சள்பொடி - அரை ஸ்பூன்

மிளகாய்ப்பொடி - 3  ஸ்பூன்

மல்லிப்பொடி - 4 ஸ்பூன்





அரைக்க

மிளகு - ஒரு  ஸ்பூன்

சீரகம் - ஒரு  ஸ்பூன்

சோம்பு - ஒரு  ஸ்பூன்

பூண்டு - 6 பல்

இஞ்சி - ஒரு துண்டு

வெங்காயம் - ஒன்று

உப்பு - தேவையான அளவு


தாளிக்க 

நல்லெண்ணெய் - 4  ஸ்பூன்

பட்டை - 2

கிராம்பு - ஒன்று

அன்னாசிப்பூ - 2

சோம்பு - அரை  ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி, வெங்காயாம் சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி   சேர்த்து சிக்கனுடன் பிசறவும்.

கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி,  பிசறிய சிக்கனை  சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.

வதங்கியதும் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.   குழம்பு கொதித்து வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்

Tag : Chettinad chicken kulambu, South Indian, Chicken Special