மீன் கிரேவி

Fish Grevi - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்: 

கட்லா மீன் துண்டுகள் - 1/2 கிலோ
வெங்காயம் - பாதி அளவு
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
புன்னை இலை - பாதி அளவு
மிளகு - 3 அல்லது 4
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - தேவைக்கேற்ப
உப்பு - ருசிக்கேற்ப


செய்முறை: 

கட்லா மீன் துண்டுகளை சுத்தம் செய்து சூடான எண்ணையில் பொரித்து வைக்கவும். வாணலியில் எண்ணையைச் சூடாக்கி நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். இதோடு மிளகாய்தூள், தனியாத்தூள், மிளகு, புன்னை இலை, இஞ்சி, பூண்டு, விழுது, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதில் உப்பு, அரை கப் தண்ணீர் விட்டு சிறுதீயில் கொதிக்கவிடவும். மசாலா வெந்து எண்ணை பிரியும் போது தேவையான கிரேவியின் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கிரேவி நன்றாக கொதித்து வரும்போது பொறித்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு எண்ணை மேலே மிதக்கும்போது இறக்கி வைக்கவும்.