சிக்கன் பிரியாணி

Chicken Briyani - Cooking Recipes in Tamil


தேவையானவை:

 சிக்கன் - அரை கிலோ, பாசுமதி அரிசி - இரண்டரை கப், தேங்காய்ப்பால் - 2 கப், தயிர் - அரை கப், எலுமிச்சம்பழம் - சிறியதாக ஒன்று (இதற்கு தக்காளி தேவையில்லை), இஞ்சி+பூண்டு விழுது - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 6, மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - 2 டீஸ்பூன்.

செய்முறை:

 சிக்கனைக் கழுவி, சுத்தம் செய்து, இஞ்சி, பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய், தயிர், மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய புதினா, மல்லித்தழை ஆகியவற்றுடன் சேர்த்துப் பிசறி ஒரு மணிநேரம் ஊற விடுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்றாக வதக்குங்கள். பிறகு, நெய் விட்டு, பிசறிய கோழி கலவையை நன்றாக எண்ணெய் கசிந்து, தண்ணீர் சுண்டும் வரை வதக்கி தேங்காய்ப்பால் சேருங்கள். கொதிவந்தவுடன் அரிசியை போடுங்கள். எலுமிச்சம்பழச் சாறை அத்துடன் கலந்து, ஒரு கொதிவந்தவுடன் குக்கரை மூடி, வெயிட் போட்டு ஒரு விசில் வந்தவுடன் "ஸிம்"மில் 5 நிமிடம் வைத்து இறக்கி சுட சுட பரிமாறுங்கள்.