கத்தரிக்காய் பச்சடி

கத்தரிக்காய் பச்சடி 
 
 
 
கத்தரிக்காய் பச்சடி தேவையான பொருட்கள்
 

கத்தரிக்காய்                            - 2 பெரியது
 
உருளைக்கிழங்கு                 - 1 மீடியம்

பச்சை மிளகாய்                      - 5 கீறியது

பெரிய வெங்காயம்               - 1 நறுக்கியது

தக்காளி                                      - 1 நறுக்கியது

கறிவேப்பிலை                        - சிறிது

பாசிப்பருப்பு                              - 1/2 கப்

மஞ்சள் பொடி                          - சிறிது

புளி                                               - சிறிய எலுமிச்சையளவு






கத்தரிக்காய் பச்சடி தாளிக்க

கடுகு, உளுந்தம் பருப்பு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
 
 

கத்தரிக்காய் பச்சடி செய்முறை
 

முதலில் பாசிப்பருப்பை சிறிது மஞ்சள் பொடி போட்டு வேக வைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயையும் உருளைக்கிழங்கையும் சிறு சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் முதலியவற்றை வெந்த பருப்பில் போட்டு வேக விடவும். நன்கு வெந்ததும் புளிக்கரைசல், உப்பு போட்டு கொதிக்க விடவும். கடைசியாக ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து போடவும். இது இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.