வாழைப்பழ சாக்லேட்

Banana Chocolate - Cooking Recipes in Tamil


கனிந்த வாழைப்பழம் - 10

பால் பவுடர் - அரை கப்

சர்க்கரை - முக்கால் கப்

கொக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் - அரை கப்

நைஸாக சீவிய முந்திரி

பிஸ்தா - 4 டீஸ்பூன்



செய்முறை:-


  • கொக்கோ பவுடர், பால் பவுடர் இரண்டையும் சலித்து வைத்துக் கொள்ளவும். 

  • வாழைப்பழத்தை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். 

  • முந்திரி, பிஸ்தா பருப்புகளை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

  • அடி கனமான, வாயகன்ற ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து, 

  • வாழைப்பழக்கூழ், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். 

  • சுருண்டு வந்ததும், பால் பவுடரைத் தூவி, வெண்ணெயைப் போட்டுக் கிளறவும், தீயைக் குறைத்து, கலவை கையில் ஒட்டாத பதம் வரும்வரை கிளறவும்.

  • பிறகு, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி சமமாக்கி, முந்திரி, பிஸ்தா துண்டுகளை மேலே தூவவும். 

  • ஆறிய பின் வில்லைகள் போடவும்.

  • ஒரு வாரம் வரை இந்த சாக்லேட்டை வைத்திருக்கலாம்.

  •  வாழைப்பழம் சாப்பிடாத குழந்தைகளுக்குக் கூட மிகவும் பிடிக்கும்.