ஆந்திரா பெசரட்

Andhra Pesarattu - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்: 

தோல் நீக்காத முழு பாசிப்பயறு - 1 கப்
வெங்காயம் - 1
இஞ்சி - 1\4 அங்குலத் துண்டு
பச்சை மிளகாய் - 5
உப்பு - 1 டீஸ்பூன் (குவித்து)
பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன்
மேலே வைக்க பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3\4 கப்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1\2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபின் ஸ்பூன்


செய்முறை:

பாசிப்பயறையும் அரிசியையும் ஒன்றாக 8 முதல் 9 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை பருப்புடன் சேர்த்து அரைக்கவும். மாவை அரைத்தவுடன் கடைசியில் உப்பு சேர்க்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி சீரகம், பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். (மேலே வைக்க) தோசைக் கல்லில் மாவை பரப்பி எண்ணெய் விட்டு மேலே சிறிது வெங்காயக் கலவையைத் தூவி முறுகலாக சுட்டு எடுக்கவும்.