இயற்கை பால்

Sprouts Smoothie - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்: 

முளைகட்டிய கேழ்வரகு - 250 கிராம்
முளைகட்டிய கம்பு - 250 கிராம்
தேங்காய் பால் - 1 கப்
சுக்குத்தூள் - கால் டீஸ்பூன்
ஏலப்பொடி - அரை டீஸ்பூன்
கரும்பு வெல்லப்பாகு - 250 கிராம்
ஆப்பிள் - 1
சீத்தாப்பழம் - 1
மஞ்சள் வாழைப்பழம் - 1
கருப்பு திராட்சை - 10
மாதுளை முத்து - 5 டீஸ்பூன்
பப்பாளிப்பழம் - 4 துண்டு
கொய்யாப்பழம் - 1
மாம்பழம் - 1


செய்முறை:

முளைகட்டிய கேழ்வரகையும் முளைகட்டிய கம்பையும் நன்கு கழுவி அதை அரைத்து பால் எடுக்கவும். பழங்கள் அனைத்தையும் பொடியாக நறுக்கவும். எடுத்து வைத்திருக்கும் பாலை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்கவிடவும். நன்கு கிண்டி கெட்டியாக, கஞ்சி பதம் வந்ததும் ஏலப்பொடி, சுக்குத்தூள், தேங்காய்ப்பால் ஊற்றி அடுப்பை அணைக்கவும். அதில் கரும்பு வெல்லப்பாகு விட்டு, நறுக்கி வைத்திருக்கும் பழங்களைப் போட்டால் சுவையான இயற்கை பால் ரெடி!


குறிப்பு:

* குழந்தைகளுக்கு சத்துமாவு கொடுப்போமே... அதைவிட அதிக சத்து இந்த இயற்கை பாலுக்கு இருக்கிறது.

* முளை கட்டிய கம்பு, முளை கட்டிய கேழ்வரகு இரண்டையும் பொடி செய்து வைத்துக் கொண்டு, குழந்தைகளுக்கு பசும்பாலில் கலந்து கொடுத்தாலும் நல்லது.