நவ்கட்

Navcut - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்: 

உப்புப்போடாத முழு பாதாம் பருப்புகள் - 1-1/2 கப்
உப்புப்போடாத முழு பிஸ்தா பருப்புகள் - 1/2 கப்
சாப்பிடக்கூடிய அரிசிக்காகிதங்கள் (water papers) - 6
அல்லது எண்ணெய் தேய்க்கப்பட்ட மெழுகு காகிதம் - 6
சர்க்கரை - 2 கப் (தனியாக)
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன் (தனியாக)
தண்ணீர் - 1/2 கப்
தேன் - 3/4 கப்
முட்டையின் வெள்ளைக்கரு - 2
வெண்ணிலா எசன்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்


செய்முறை:

ஓவனை 350 டிகிரி சூடு செய்யவும். ஒரு பேக்கிங் காகிதத்தில் பாதாம் பருப்புகளையும், பிஸ்தா பருப்புகளையும் பரப்பி பொன்னிறமாகும் வரை பத்து நிமிடங்கள் சூடு செய்யவும்.

ஒரு 8 இன்ச் கேக் அச்சில் (8-inch-square cake pan) சரியாக 8 இன்ச் வெட்டிய அரிசிக்காகிதத்தை பரப்பவும். இன்னொரு 8 இன்ச் அரிசிக்காகிதத்தை தனியாக வைத்துக்கொள்ளவும். (இந்த அரிசிக்காகிதம் இல்லையென்றால், மெழுகுக்காகிதம் உபயோகப்படுத்தலாம். அதற்கு முன்னர், கேக் அச்சின் பக்கவாட்டிலும், கீழும் தடவி இந்த மெழுகுக்காகிதம் வைத்துக்கொள்ளலாம்)
2 கப் சர்க்கரையையும், தண்ணீரையும் ஒரு சின்ன பாத்திரத்தில் போட்டு சுழற்றி தேய்த்து கலக்கவும். இந்த கலவையை 1 லிட்டர் பிடிக்கும் தடிமனான அடிப்பாகம் கொண்ட வாணலியில் ஊற்றவும். இந்தக்கலவையை மிதமான சூட்டில் கலக்கவும். சர்க்கரை முழுவதும் கரைந்ததும், கலக்குவதை நிறுத்திவிட்டு, கொதிக்கும் வரை நன்கு சூடேற்றவும். ஒரு கரண்டி கொண்டு பாத்திரத்தின் ஓரங்களில் சர்க்கரை கட்டியாகிப் படியாமல் இருக்கும்படி கரைத்துக்கொண்டே இருக்கவும்.

சர்க்கரை வேகும் போது, மற்றொரு 1 லிட்டர் அளவு கொள்ளும் வாணலியில் தேனை ஊற்றவும். ஒரு இனிப்பு தர்மாமீட்டர் கொண்டு வெப்பத்தை அளக்கவும். இந்த தேனை மிதமான தீயில் 280 டிகிரி வரும் வரை 19 நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும். இப்போது தேன் கறுப்பு கலவை போல வந்தவுடன் இதை அடுப்பிலிருந்து எடுத்துவிடவும்.

இதே நேரம், முட்டை வெள்ளைக்கருவை ஒரு மிக்ஸரில் போட்டு (விஸ்க் இணைப்புள்ளது) நுரையாக வரும்வரை அடிக்கவும். மிக்ஸர் ஓடிக்கொண்டிருக்கும்போதே, மீதமுள்ள 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரையை 1 அல்லது 2 நிமிடங்கள் மெதுவாக சேர்த்து அடிக்கவும்.

மிக்ஸர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்போது, தேனை இந்த வெள்ளைக்கருவில் மெதுவாக ஒரு சீராக ஊற்றவும். மிக்ஸரை நிறுத்திவிட்டு, சர்க்கரையின் வெப்பத்தைப் பார்க்கவும். சர்க்கரை 330 டிகிரி வெப்பமாக இருக்கும்போது, மீண்டும் மிக்ஸரை அதி வேகத்தில் ஓடவிட்டு மெதுவாக சர்க்கரையையும் மெதுவாக சீராக ஊற்றவும்.

கலவை கெட்டியாகும் வரை 5 அல்லது 10 நிமிடங்கள் அதிவேகமாக ஓடவிடவும். கலவை ஈரமாகவும், பளபளப்பாகவும், இருக்கும். இப்போது வெண்ணிலா எசன்ஸை ஊற்றி இன்னொரு நிமிடம் ஓட்டி வெண்ணிலா எசன்ஸ் நன்றாகக் கலக்கும்படி அடிக்கவும்.

வேகமாக, பாதாம் பருப்புக்களையும், பிஸ்தா பருப்புக்களையும் இவற்றில் போட்டு கலந்து, முன்பே தயார் செய்து வைத்திருந்த கேக் அச்சில் ஊற்றவும். இனிப்பின் மேல்பாகத்தை ஒரு தோசைக்கரண்டியால் சமப்படுத்தவும். இதன் மேல் இன்னொரு அரிசிக்காகிதத்தை (அல்லது எண்ணெய் தேய்க்கப்பட்ட மெழுகுக்காகிதம், எண்ணெய் இனிப்பில் படும்படி) வைத்து மேற்பாகத்தை சமப்படுத்தவும். இந்த இனிப்பு 8 மணிநேரம் (அல்லது இரவு முழுவதும்) இருக்கும்படி செய்யவும்.

கேக் அச்சின் ஓரம் கத்தியை நுழைத்து, நவ்கட்டை வெளியே எடுக்கலாம். மெழுகுக்காகிதம் என்றால் அதனை தூக்கி எறிந்து விடுங்கள். வெட்டும் பலகையில் வைத்து ஓரங்களை வெட்டி விட்டு, 1 இன்ச் சதுரங்களாக வெட்டவும். இந்த துண்டுகளை மெழுகுக்காகிதங்களில் சுற்றி வைத்துக் கெடாமல் பார்த்துக்கொள்ளலாம். 24 துண்டுகள் கிடைக்கும். (ஒவ்வொரு துண்டும் சுமார் 178 கலோரிகளை கொண்டது.)

இது இறுக்கமான, தேன் வாசம் நிறைந்த இனிப்பு பலகாரம். இது மெல்லும் அளவுக்கு மென்மையாகவும், வெட்டும் அளவுக்கு கடினமாகவும் இருக்கும். சரியாகப் படித்துவிட்டு, இதற்குத் தேவையான விஷயங்களை முன்னமே எடுத்துவைத்துக்கொண்டு ஆரம்பியுங்கள். தடிமனான அடிப்பாகம் கொண்ட வாணலி வேண்டும். (அதே நேரம் ஒரு கையில் இதனை தூக்கும் அளவுக்கு லேசாகவும் இருக்க வேண்டும்) இத்துடன், மிக்ஸி, இனிப்பின் வெப்பத்தை அறியும் தட்பவெப்பமானி, தோசைக்கரண்டி போன்றவையும் வேண்டும். இதை 35 நிமிடங்களில் செய்து விடலாம். முழுமையாக ஆகும் நேரம்: 9 மணி நேரங்கள் (8 மணி நேரம் ஊறுவது).