மஷ்ரூம் சூப்

Indian Soup: Mushroom Soup - Cooking Recipes in Tamil


ஈஸியா ஜீரணமாக சிறந்தது சூப். உணவுப் பாதையில் உள்ள கசடை சரி செய்து ஜீரணதுக்கு உதவும் பெஸ்ட் அபிடைசர். சூப்புனாலே மஷ்ரூம் சூப்புக்குத்தான் தனி மவுசு. சுவை மட்டுமில்லாமல், அதிக சத்து இருக்கிறதுதான் இதோட ஸ்பெஷாலிட்டி!


தேவையான பொருட்கள்:

மீடியம் சைஸ் மஷ்ரூம் - 3
எண்ணெய் - 1/2 டீ ஸ்பூன்
மைதா -  1-1/2 டீ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1/4 டீ ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீ ஸ்பூன்
சோளமாவு - 2 டீ ஸ்பூன்
உப்பு -  1/2 ஸ்பூன்

செய்முறை:

* மஷ்ரூமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* சோள மாவு, மிளகுத் தூளை தனித்தனியே சிறிது தண்­ணீரில் கலந்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு மைதா மாவைப் போட்டு வறுத்து, மூன்று கப் தண்ணீ­ர் விட்டு கொதிக்க விடவும்.

* இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது நறுக்கிய மஷ்ரூமை போட்டு நன்றாக வெந்ததும் கரைத்த சோளமாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.