இஞ்சி துவையல்

Indian Medicinal Recipe: Ginger chutney - Cooking Recipes in Tamil


பலகாரம், இனிப்பு வகைகள், சுவையான அசைவ சாப்பாடு.... ம்ம்.. இன்னும் எவ்வளவோ இருக்கு. இன்னிக்கே டின் கட்டிடனும்னு தோணுது... ஆனா ஜீரணக் கோளாறு ஆகிடுமேனு தீபாவளியதுமா வாய்க்கு பூட்டு போட முடியாம தவிச்சிட்டிருக்கவங்களோட தவிப்ப தணிக்கத்தான் இந்த இஞ்சி துவையல்! அப்பறம் என்ன கவலை.. ஒரு பிடி பிடிச்சிடவேண்டியதுதானே......

தேவையான பொருட்கள்:

இஞ்சி விரல் நீளதுண்டு - 1
சிறிய வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 1
தனியா - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
மிளகு - 5
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் துருவல் - 1/2 கப்
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

* வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய்விட்டு இஞ்சியை வதக்கி தனியாக வைக்கவும்.

* அதே வாணலியில் மீதி எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும். தனியா, மிளகாய், சீரகம், மிளகு, கறிவேப்பிலை போட்டு வதக்கி தேங்காய் துருவல், புளி, உப்பு, வதக்கிய இஞ்சி சேர்த்து வதக்கி ஆறவிடவும்.

* ஆறியவுடன் மிக்சியில் சிறிது தண்­ணீர் சேர்த்து அரைக்கவும். சுவையான இஞ்சி துவையல் ரெடி.

குறிப்பு: 

* எண்ணெய் பலகாரங்கள், அசைவ உணவு உண்ணும்போது இஞ்சி துவையலையும் சேர்த்துக்கொள்வது நல்லது. அஜீரணத்துக்கு டாடா சொல்லும்.