சுவீட் பராத்தா

 
 
சுவீட் பராத்தா தேவையான பொருட்கள்

மாவிற்கு

கோதுமை மாவு – 2 கப்
தண்ணீர்                   – தேவையான அளவு

FILLING

பொடித்த வெல்லம்   – 1/2 கப்
முந்திரி                                – 15
கிஸ்மிஸ்                          – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் விதை          – 1/2 டீஸ்பூன்
நெய்                                       – தேவையான அளவு

சுவீட் பராத்தா செய்முறை

கோதுமை மாவுடன் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து அரைமணி நேரம் ஊற விடவும். ஊறிய பின் அதனை ஒரே அளவுள்ள உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். முந்திரியை சிறிது சிறிதாக உடைத்துக் கொள்ளவும். வெல்லம், முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய் விதை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒரே அளவுள்ள சப்பாத்திக்களாக திக்காக தேய்த்துக் கொள்ளவும். ஒரு சப்பாத்தியின் மேல் மிக்ஸ் பண்ணி வைத்துள்ள திவீறீறீவீஸீரீ – ஐ வைத்து அதன் மேல் மற்றொரு சப்பாத்தியை வைத்து மூடி, ஒரங்களை ஒட்டி சப்பாத்திக்கட்டையால் லேசாகத் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு சிறிது நெய்விட்டு ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.