மட்டன் ப்ரை



தேவையான பொருட்கள் :

மட்டன் - 350 கிராம்

வெங்காயம் - 2


இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி


மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி


மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி


வரமிளகாய் -3


தயிர் - 100 மில்லி அல்லது தக்காளி -1


சீரகம் - ஒரு தேக்கரண்டி


சோம்பு - ஒரு தேக்கரண்டி


உப்பு - தேவையான அளவு


பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2



செய்முறை :

1.குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்கள் மற்றும் சோம்பு,வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

2. அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

3.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

4.அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

5.மட்டன் வதங்கியதும் தயிர் மற்றும் சீரகம் சேர்த்து பிரட்டி விடவும்.

6.மட்டன் வேக அதில் இருக்கும் தண்ணீரே போதுமானது, தேவையெனில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சிம்மில் வைத்து வேக விடவும்.

7.மட்டன் வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்