மட்டன் கடாய்

தேவையான பொருட்கள்:

மட்டன்(எலும்பில்லாதது) - அரைக் கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 3 ஸ்பூன்
பட்டை - ஒரு அங்குல அளவு
ஏலக்காய் - 2
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 9 ஸ்பூன்
)மல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

மட்டனை சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் பச்சை மிளகாயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


குக்கரில் சுத்தம் செய்த மட்டனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், பொடியாக நறுக்கின   வெங்காயம் ,  பச்சை மிளகாய் ,தக்காளி  , சிறிது  கொத்தமல்லி  இலை  மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கறி வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.


குக்கரை மூடி அடுப்பில் வைத்து வெயிட் போட்டு 4   விசில் வந்ததும் அடுப்பை வைத்து 10 நிமிடம் வைத்திருந்து  பின்னர் இறக்கவும்
குக்கரின் மூடியை திறந்து அதில் தண்ணீர் அதிகமிருந்தால்  அடுப்பில் வைத்து தண்ணீரை சுண்ட விடவும்.

கடாயை அடுப்பில் வைத்து   எண்ணைய்  ஊற்றி  பட்டை மற்றும் ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.  அதில் இந்த மட்டன் கலவையை ஊற்றிஅடிக்கடி  கிளறி விடவும். இல்லையென்றால் அடி பிடித்து விடும்

மட்டன் கலவை நன்கு சுருண்டு வந்ததும் தீயை மிதமாக வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். 15 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.


சுவையான மட்டன் கடாய் வறுவல் ரெடி. எவ்வளவு அதிக நேரம் அடுப்பில் வைத்திருக்கின்றோமோ அவ்வளவு மொறுமொறுப்பாக இருக்கும்..இப்போது சுவையான மட்டன் கடாய் ரெடி