செட்டிநாடு மட்டன் கிரேவி

தேவையான பொருள்கள்
மட்டன் -1/4 கிலோ
சின்ன வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 20
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
தக்காளி (பொடியாக நறுக்கியது) – 2
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் ½ ஸ்பூன்
மிளகு சீரகத் தூள் – 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைத்துக் கொள்ள:
தேங்காய் – 1 ஸ்பூன்
சகசா - 1ஸ்பூன்
முந்திரி - 4
தாளிக்க:
பட்டை - சிறிய துண்டு
ஏலக்காய் - 1
லவங்கம் – 1
சோம்பு – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை – 1 கொத்து
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்


செய்முறை:

முதலில் மட்டனை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு மஞ்சள் தூள், உப்பு மற்றும் ½ கப் தண்ணீர் விட்டு 3 விசில் வரை விட்டு, பின் சிம்மில் 5 நிமிடம் வேக விடவும். அடி கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடவும்

பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின், தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். பிறகு, மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்

பின் வேக வைத்த மட்டனைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்து வதக்கி, மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக விடவும்

தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கி, பின் மிளகு சீரகத் தூள் சேர்த்து, மசாலா நன்றாகக் கெட்டியாகி வறுவல் பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

இந்த வறுவல் அனைத்து சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.