மட்டன் கோலா

தேவையான பொருள்கள்:

கொத்துகறி  - கால் கிலோ

சின்ன வெங்காயம் - 25

தேங்காய் துருவல் - அரை கப்

பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி

பொட்டுகடலை - அரை கப்

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - 3/4 தேக்கரண்டி


 செய்முறை:


கறியை கழுவி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கறியை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு  மிக்ஸியில் போட்டும் அரைத்து எடுக்கவும்.
கறி நன்கு விழுது போல் இருக்க வேண்டும்.

அப்போதுதான் கோலா நன்றாக வரும்.
மிக்ஸியில் பொட்டுகடலையை மட்டும் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 தேங்காய், பெருங்சீரகம் இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்


பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள கறி மற்றும் நறுக்கின வெங்காயம் சேர்க்கவும். 

அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து, கைகளால் நன்கு பிசையவும். தண்ணீர் சேர்க்காமல் பிசையவும். மசாலா வடை மாவினை விட சற்று கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாக இல்லையெனில் சிறிது பொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிசைந்து கொள்ளலாம்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை, ஒரு தடவைக்கு ஐந்து ஆறாக, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.