காளான் பக்கோடா

 
காளான் பக்கோடா தேவையான பொருட்கள்

காளான்                                   - 150 கிராம்
வெங்காயம்                          - 50 கிராம்
முட்டைகோசு                     - 30 கிராம்
கொத்தமல்லித் தழை       - சிறிது
மிளகாய்                                 - 4
கடலைமாவு                        - 100 கிராம்
மசாலாத்தூள்                      - 11/2 டீஸ்பூன்
உப்பு                                        - தேவைக்கேற்ப
கடலை எண்ணெய்          - 200 மி.லி.

காளான் பக்கோடா செய்முறை

காளான், வெங்காயம், முட்டை கோசு, கொத்தமல்லித்தழை, மிளகாய் ஆகியவற்றைச் சிறுதுண்டுகளாக வெட்டிக் கொண்டு கடலை மாவைக் கொட்டிக் கலக்க வேண்டும். உப்பு, மசாலாத்தூள் ஆகியவற்றையும், கலந்து உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும். எண்ணெய்யைக் காய வைத்து, உருண்டைகளைப் போட்டுச் சிவக்க வெந்ததும் எடுத்து வைத்துக் கொள்ளலாம். காளானையும் கொட்டி வதக்கி மிளகாய்ப்பொடி, புளி, மஞ்சள்தூள், சோடியம் பென்சோயேட், வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து வேகவிட்டுத் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.