ஸ்பைசி காலிஃப்ளவர் மசாலா

Spicy Cauliflower Masala - Cooking Recipes in Tamil


காலிஃப்ளவரை அப்படியே பேக் செய்து சாப்பிட்டால் ட்ரையாக இருக்கும். அதனால் நமக்கு விருப்பப்பட்டவாறு மசாலாக்கள் சேர்த்து ஸ்பைசியாக்கி உண்ணலாம். பிரட், சப்பாத்தி ரோல்ஸூடன் ஸ்டஃப் செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
காலிஃப்ளவர் - பாதி
பூண்டு - 2 பல்
கரம் மசாலா - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
எலுமிச்சம் சாறு - சிறிதளவு

செய்முறை:

* காலிஃப்ளவரை சுத்தம் செய்து வைக்கவும்.

* பேக்கிங் ட்ரேயில் காலிஃப்ளவரை பரப்பி விடவும்.

* சட்டியில் எண்ணெய் விட்டு, மஞ்சள், உப்பு சேர்க்கவும்.

* லேசாக சூடானதும் காலிஃப்ளவரின் மீது ஊற்றவும்.

* 385 ஃபாரனைட் முற்சூடு செய்யப்பட்ட அவனில், 30 நிமிடங்கள் பேக் பண்ணவும்.

* வேறு சட்டியில் பொடியாக நறுக்கிய வெங்காயம் வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி சேர்க்கவும்.

* பின்னர் கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்க்கவும்.

* நன்கு வதங்கியதும் காலிஃப்ளவரை சேர்த்து கிளறவும்.

* சிறிது தண்­ணீர் சேர்த்து, தண்ணீ­ர் வற்றும் வரை கிளறி, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

குறிப்பு. காலிஃப்ளவரை பேக் செய்த பின்னர் அப்படியே சாப்பிட்டால் கூட மிகவும் சுவையாக இருக்கும்.